
ஐங்கரன் என்பது முதன்முதல் கடவுளாகிய விநாயகரைக் குறிக்கும் சொல்.
பிள்ளையார் என்றும் கணேசன் என்றும் அழைக்கப் படுபவரும் இவரே.
சிவனாரின் தனையனும் , முருகப் பெருமானின் தமையனும் இவரே.



இந்து மதத்தின் எல்லா வழிபாடுகளும், நற்காரியங்களும் முதன் முதலில் இவரை வணங்கிய பிறகே தொடரும்.
இந்து சமய நூல்கள் பலவும் இவரை வழிபட்டபின் துவங்கும்.


இவர் தமது பெற்றோரை வலம்வந்து உலகை வலம்வந்துவிட்டதாகக் கூறி உண்மையிலேயே உலகைச்சுற்றி வந்த முருகனை வென்றவர்.
இந்த கதை விநாயகரின் அறிவு கூர்மையையும் பெற்றோரை வணங்கும் வியத்தகு பெருமையையும் விளக்கும்.
துரைசாமி திருவாசகம்
விசாகப்பட்டினம்


0 Comments