என்னையா கடிக்கிற.? நாகப்பாம்பை அசால்டா வளைத்து பிடித்து கடித்து கொன்ற சிறுவன்..

என்னையா கடிக்கிற.? நாகப்பாம்பை அசால்டா வளைத்து பிடித்து கடித்து கொன்ற சிறுவன்..

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் தன்னை கடித்த நாகபாம்பை 8 வயது சிறுவன் திருப்பி கடித்ததில், அந்த பாம்பு உயிரிழந்துள்ளது

தலைநகர் ராய்ப்பூரிலிருந்து 350 கி.மீ தொலைவில் அமைந்து ஜாஷ்பூர் மலைவாழ் பகுதியில் பாஹடி கோர்வா என்று பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வேறு எந்த பகுதிகளிலும் இல்லாத வகையில் 200 வகையான பாம்புகள் காணபடுவதால், இந்த பகுதியை பாம்புகளின் இருப்பிடம் என்று அழைக்கின்றனர்.

இந்நிலையில் பந்தர்பாத் கிராமத்தில் தனது வீட்டிற்கு பின்புறத்தில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது தீபக் என்ற சிறுவனை நாகபாம்பு ஒன்று கடித்துள்ளது. அதே நேரத்தில் தன்னை கடித்த அந்த பாம்பை வளைத்து பிடித்து தனது கையில் சுற்றிக்கொண்டு அதனை கடித்துள்ளான். இதில் விஷம் நிறைந்த நாகபாம்பு இறந்துள்ளது.

இதனை கண்டு பதறியடைந்து, சிறுவனின் பெற்றோர் அவரை அழைத்து அருகில் உள்ள அரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் பாம்பு விஷம் முறிவு ஊசி போட்டனர். பின்னர் சிறுவன் தீபக் 24 மணி நேரம் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கபட்டான். தற்போது அவர் பூர்ண நலமுடன் இருப்பதை அடுத்து அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
asianetnews


 


Post a Comment

Previous Post Next Post