
அண்மைக்காலமாக மீண்டும் சீனாவில் கொரோனா அலை மிக வேகமாக பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் கடும் அரச கட்டுப்பாடுகள் காரணமாக அண்மையில் மாணவ, மக்கள் புரட்சிகள் ஏற்ப்படது.
இதைத் தொடர்ந்து அண்மைக்காலத்தில் உள்நாட்டு கட்டுப்பாடுகள் தளர்தப்பட்டு மகளின் இயல்பு வாழ்கைக்கு இடமளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒமிக்ரோனின் மாறுபாடான B. F. 7 என்ற வைரஸ் அலை தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.
மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவாதாகவும் . தினமும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவதாகவும், உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாகவும் தகவல் அவ்வப்போது சில வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாக் கொண்டிருக்கின்றது.
மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை
இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவும் சிற்சில காணொளிகள் சில ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இவ்வாறு கொரோனாவினால் ஏற்படும் மரணங்களை நிமோனியா மற்றும் சுவாச கோளாறுகளால் ஏற்பட்டதாக அரசு தரப்பில் இறப்புகள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் கிட்டத்தட்ட 37 மில்லியன் (3.7 கோடி) மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், சீன அரசின் சுகாதார அமைச்சின் மதிப்பீடுகளின்படி, இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 37 மில்லியன் (3.7 கோடி) மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிசம்பர் மாதத்தின் முதல் இரு வார நாட்களில் மட்டும் சுமார் 248 மில்லியன் மக்கள், அதாவது சீனா நாடாடின் முழு சனத்தொகையில் 18 சதவீத மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
உலகளாவியரீதியில் செய்திகள் இவ்வாறு வெளியாகிய போதிலும் கடந்த 20 ஆம் திகதி அன்று சீனா வெளியிட்ட உத்தியேகபூர்வ மதிப்பீட்டின் படி கொரோனா பாதிப்புக்கள் 3049 என்பதாகும்.
தினசரி 37 மில்லியன் பாதிப்பு என்பதற்கும், அந்த நாளில் சீனாவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட 3,049 நோயாளிகள் என்ற எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய அளவிலான வித்தியாசம் உள்ளது.
எவ்வாறாயினும் தினசரி பாதிப்புக்கான தொகை முந்தைய தொகையை விட பல மடங்கு அதிகமாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
-பேருவளை ஹில்மி
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments