Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா 142


பிரேசிலின் விவசாய வணிகத்தில் முக்கிய இடம் பிடித்திருக்கும் 'மாட்டோக்ரோஸோ' மாகாணத்தில் பழங்குடியினர் பாதுகாப்பாக வாழ அங்கீகரிகப்பட்ட  'பிரிப்குரா' வனப்பகுதியில் புரோகோனிஷ் அமைந்துள்ளது.

இங்கு வாழுகின்ற  பழங்குடியினர் மரம் வெட்டுபவர்களையும், விவசாயிசாயிகளையும் இப்பகுதிக்குள் ஊடுருவ ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

அதனைத் தனது இனத்தவருக்குள் வருடந்தம் நினைவு படுத்திக் கொள்வதை  நோக்காகக் கொண்டே ஆதிகாலம் தொட்டு இங்கு தீ மூட்டும் பண்டிகை நடைபெற்று வருகின்றது.

வருடத்தின் இறுதி நாளைக் கணித்துக் கொள்வதற்காக இவர்கள் பண்டிகை மைதானத்திலிருக்கும் பழைமையான மரத்தினைப் பயன்படுத்தி வருகின்றார்கள். மரத்தில் இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிட்ட தினத்தையடுத்தையடுத்த தினம் இன்றாகும்.

இம்முறை பெரியகல்லில் தீமூட்டும் பண்டிகையை அவர்கள் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் கல்லடிவாரத்துப் பெரியவரைத் தம்மோடிணைத்துக் கொள்வதாகும்!

கடந்த காலத்துப் பண்டிகைகளின்போது ரெங்க்மா  - செரோக்கி சோடியினர்  விசேடமானவர்களாகக் கணிக்கப்பட்டதுபோல்
இம்முறை இளம் சோடியினராக சங்கரன் - சிங்கினி  கணிக்கப்படுகின்றார்கள்.

செரோக்கி தன்னை  அலங்காரத்துக் கொண்டதும், ரெங்க்மா அவனுடனான தனது கோபத்தைப் புறந்தள்ளி வைத்துவிட்டு, அத்தை - மாமாவை அழைத்துக்கொண்டு செரோக்கியுடன் காம்பீரமாக 'பெரியகல்' நோக்கி  நடக்கலானாள்.

கற்சிகரத்தை அடைந்த அவர்கள், கூடியிருந்த மக்களோடு மக்களாக இணைந்து கொண்டனர்.

கவர்ச்சியான அலங்காரத்துடன் தபுயாவிலிருந்து வந்திருந்த அவர்களின் மெங்கோத்தோழனான மங்குவையும், அவனது மனைவியையும் கண்டதும் ரெங்க்மா பிரமித்துப்போய்விட்டாள்.  ரெங்க்மாவை மங்குவின் மனைவியோடு இணைத்துவிட்டு, பெரியவரை அழைத்து வருவதற்காக செரோக்கியும் மங்குவும் வேரேணியில் ஏறி, மெல்ல மெல்லக் கல்லடிவாரம் நோக்கி இறங்கலாயினர்!
(தொடரும்)



 


Post a Comment

0 Comments