மனம் திறந்தேன் மனதினில்
உனை வைத்தேன் மனம் கவர்ந்த
மணாளனாக நினைத்தேன்
மறைத்தே உன்னைக் காத்தேன்
(மா) (பலா) என்ன சுவை
உன் வார்த்தை தானே இனிமை
அருளாக வேண்டும் உன் அன்பு தானே
ஆறுமுகன் பெயர் கொண்டவனே
கண்ட இடமெல்லாம் காணும்
ஆலயத்தில் கையேந்திக் கேட்பது
வரமாய் உன் உறவைத்தானே
நான் தொழில் புரியும் வேளையிலும்
என் விழியில் ஒளியாக தோன்றுவதும்
உன் எழில் முகம் தானே
வட்டமிடும் பட்டாம் பூச்சு உனை
எதிர் பார்த்து வாட்டமுடன் இருக்கும்
செங்கமலம் நான்தானே
வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோர்
வேண்டாம் வாழ்வோம் நாம் வந்து
விடு மன்னவனே
பிறந்த. நாடு எந்த நாடாகவும்
இருந்துட்டுப் போகட்டும்
இறக்கும் போது வேண்டும்
உன் வீடுதானே
பிறந்த மண்ணில் புதையுண்டு
விட ஆசைதான் அதற்கு முன்
முகம் புதைக்க வேண்டும்
உன் மார்பினில் தானே
உன் பாதம் தொடரும் துணையாக
வேண்டும் நான் கல்லறை சென்ற
பின்னும் அங்கே அந்த நினைவினில்
மகிழ்ந்திட வேண்டும் என் ஆத்மா தானே
கலா
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
1 Comments
அருமை அண்ணா
ReplyDelete