Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -143


ஒருவன் சரியாகவும், நேர்த்தியாகவும்  இருக்கும் போது நம்முடன் இருப்பவர்கள் நம்மைப்பற்றி நல்லதாக எண்ணுவதொன்றும் பெரிய விசயமே இல்லை!

ஆனால் அந்த ஒருவனே சூழ்நிலையின் காரணமாக  மோசமாகி, இருளிற்சிக்கி, திசைமாறித் தவிக்கும்போது, அவனது செயல்பற்றி எதிர்மறைக் கருத்துக் கொள்ளாது, துணிச்சலுடன் அவனை மாற்றி,  மற்றவர்களிடத்த்தில் அவன் பற்றிய நல்லெண்ணத்தை எற்படுத்துவதென்பது ஒரு பெரிய விசயமே!

அந்தவகையில் ரங்குவை அவனது சகல இழிசெயல்களிலிருந்தும் மறக்கடிக்க வைத்து, அவனை நல்வழிப்படுத்துவதில் ஈடுபாடு அதிகம் கொண்டு, அவனுக்கு ஆதரவாகத் தோள் கொடுத்தவள் சிங்கினி!

இன்று இவர்களை முழுக்கானகமுமே போற்றிப் புகழ்ந்து கொண்டாட்டத் தொடங்கிவிட்டது!

ஒவ்வொரு தீ வைப்புத் தினத்திலும், கானகத்துக்குள் அதி சிறந்த சோடியைத் தெரிவு செய்து, அவர்களை முன்னிலைப்படுத்தித் தீ மூட்டுவதை அம்மக்கள் வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.

சபையில் இருவரும் ஒருசேர நின்றபோது, பழங்குடியினரின் மூத்தவர் ஒருவர் சோடி சேர்க்கும் மந்திரமொன்றை உச்சரிக்கலானார். அதனை ரங்குவும் சிங்கினியும்  அங்கு குழுமியிருந்த மக்கள் அனைவரும் கேட்கக் கூடியதை உரத்துக் கூறலாயினர்.

"கையளிக்கிறேன் என் கரங்களையும், என்னிதயத்தையும்; சொந்தமாய் இருக்கும் என் ஜீவிதத்தின் எல்லாப்பகுதிகளையும்,  உன்னிடம்!

நிலத்தின் மீதிருந்து எனக்கு வாய்த்த,உன்னதமான ஒப்புயர்வற்ற பங்காளியாக, என் பக்கத்தில் பயணிக்குமாறு  வேண்டுகிறேன்  உனை நான்!"

மந்திரத்தை மறி மாறி இருவரும் பல முறைகளில்  உரத்து உச்சரித்துக் களைத்துப்போன நிலையிலிருந்த வேளையில், மங்குவும் செரோக்கியும்   கல்லடிவாரத்துப் பெரியவரைக் கைத்தாங்கலாக்கியவாறே  பெரியகல்லின் மேற்பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
(தொடரும்)



 


Post a Comment

0 Comments