Ticker

6/recent/ticker-posts

இறந்த மனைவி கூடவே இருப்பது போல் ஓர் உணர்வு... 30,000 டாலர் செலவில் சிலை செய்த இந்திய ஆடவர்


39 ஆண்டுத் திருமண வாழ்க்கையை COVID-19 பறித்துக்கொண்டது...

ஆனால் தப்பாஸ் சண்டில்யாவின் (Tapas Sandilya) காதலை அல்ல...

2021ஆம் ஆண்டு அவரின் 59 வயது மனைவி இந்திராணி கிருமித்தொற்றால் மாண்டார்.

அவரின் உருவத்தை 30 கிலோகிராம் சிலிக்கான் சிலையாகச் செய்து கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் வைத்திருக்கிறார் சண்டில்யா.

அந்தச் சிலைக்குச் சிகை அலங்காரம் செய்வது...

சேலை மடிப்பைச் சரி செய்வது...

எனச் சண்டில்யா பொழுதைக் கழிக்கிறார்.

இந்திராணி சோஃபாவில் விரும்பி அமரும் இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டிருப்பதாக SCMP செய்தி நிறுவனம் கூறியது.

தாம் காலமானால் தமக்கு சிலை செய்யுமாறு இந்திராணி ஒரு முறை கூறியதாகச் சண்டில்யா குறிப்பிட்டார்.

அதனால் சுமார் 30,000 டாலர் செலவில் அவர் சிலையை உருவாக்கினார்.

அதற்கு 6 மாதங்களாகின.

சிலையை முதல்முறை பார்த்தபோது சண்டில்யாவிற்குச் சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை.

நீண்டகால ஆசை நிறைவேறியது போல் அவர் உணர்ந்ததாக SCMP தெரிவித்தது.
seithi.mediacorp



 


Post a Comment

0 Comments