Ticker

6/recent/ticker-posts

நலம் வாழ -மருத்துவப் பகுதி -8

அன்பார்ந்த வேட்டை வாசகர்களே...
நல்ல உடல் வளம் மனவளத்திற்கும் தூய ஆன்மீக வளத்திற்கும் நல்ல உணவு மிகவும் அவசியம், இன்றைய சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் உணவு உண்ணும் பழக்க வழக்கங்களில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. வருவாய் குறைவாக உள்ள மக்களிடையே அறியாமை, இயலாமை ,தவறான பழக்கவழக்கங்களினாலும் உணவு சத்து குறை நோய்களும்,              

வருவாய் மிகுந்த மக்களிடையே மிகுந்த எடை அதிகரிப்பும், தவறான உணவை தேர்ந்தெடுத்து குறிப்பாக அதிக கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்பதினால்  ஜீரண கோளாறினால் ஏற்படும் நோய்களும், இருதயம் சம்பந்தப்பட்ட வியாதியினாலும் அவதிப்படுகின்றனர்.

இவ்வாறு நாம் நமது முறையற்ற பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக இருக்கின்றோம்.குறிப்பாக நாம் நமது நாவிற்கு அடிமையாக இருக்கின்றோம் இதனை மாற்றுவது மிகவும் சிரமம்தான் ஆயினும் உணவுபழக்கங்களினால் ஏற்படும் தவறான உணவு பழக்கங்களினால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு சரியாக உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்ற தொடரில் நாம் உணவு உண்ட பிறகு செரித்து அது ஆற்றலாக மாறி நமது உடலுக்கு சக்தியை தருகின்றது, அதேபோல் அந்த ஆற்றலை பாதிக்கும் காரணிகளாக உடலின் அளவு, உடலின் கட்டு ,வயது போன்றவற்றை சுருக்கமாக நாம் பார்த்தோம்.

இன்று நாம்  மேலே கூறிய காரணங்களை விரிவாக பார்க்கலாம்,
  • உடலின் அளவு சராசரியாக உயரத்திற்கு ஏற்ற உடல் அமைப்பும் இருக்க வேண்டும் ஆனால் வளர்ச்சிதை மாற்றங்களால் ஏற்படும் உடல் பருமன் உடலின் ஆற்றலின் செயல்திறனில் குறைபாடு ஏற்படுகிறது.
  • உடலின் கட்டு (Body composition) .உடலின் கொழுப்பு அதிகமாக இருக்கும் பொழுது ஆற்றலின் அதாவது சக்தியின் அடிப்படை தேவை அதாவது( Basic Metabolic Rate)குறைகிறது
  • குழந்தை பருவத்திலும் இளம் வயதிலும் வளர்ச்சிக்காக அதிக ஆற்றல் தேவைப்படுகிறது வயது ஆக ஆக செலவாகும் ஆற்றலும் குறைந்து விடுகிறது.
  • பால் இனம் (Gender)ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் அளவு( Composition ) மாறுபடுவதால் எனர்ஜியின் செலவு செய்யும் விதமும் மாறுபடுகிறது
  • உண்ணும் உணவு.அதிகமாக உண்ணும் பொழுது செரிப்பதற்காக அதிக ஆற்றல் தேவைப்படுகிறது அளவோடு உண்ணும் பொழுது செரிக்கும் திறன் மிகுந்து அவை ஆற்றலாக மாறுகிறது.
  • தட்பவெப்ப நிலை காற்றின் வெப்பம் காற்றின் வேகம் வெயில் மழை இவற்றிற்கு ஏற்ப நமது ஆற்றலில் செயல்திறன் குறைவாக இருக்கும்.
  • ஆரோக்கிய நிலை, மனநிலை நோய், போன்ற பல காரணங்களினால் நமது ஆற்றல் குறைகிறது.
இவை மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களினால் நாம் உண்ணும் உணவின் ஆற்றல் குறையவோ அதிகரிக்கவோ செய்கிறது ஆனால் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நமது ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதனை அடுத்த வாரம் காணலாம் என் அன்பிற்கினிய வேட்டை வாசகர்களே ......

நலம் வாழ.....
தொடரில் அடுத்த வாரம் சந்திக்கலாம்......நலம் வாழ என்றும் ........
டாக்டர் ஃபர்ஜானா பாத்திமா M.D(Acu).

தொகுப்பு :
உங்கள் குறள் யோகி, 
தமிழ்ச் செம்மல், 
டாக்டர் மு.க.அன்வர் பாட்சா.


 


Post a Comment

0 Comments