Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-8

(அவன் அப்படி கூறியதும் துரையைப் பார்த்து மனைவி வசந்தி மூக்கை  சிமிட்டி விட்டு ம்க்கும்  என்று ஒரு ஓசையைக் கொடுத்து விட்டு எழுந்து சென்றாள் கொசுபத்தியை எடுத்து வந்திட அவள் சென்றதும் அத்தனை மணி நேரமும் மௌனம் காத்த எல்லோரும் கணீர் என சிரித்தார்கள்  பாட்டி உடனே மகனைப் பார்த்து கொஞ்சம் கோபமாகவே சொன்னார் ஏன்டா துரை உனக்கு தெரியாதா அவள் இப்படித்தான் ஏதாவது வெகுளியாகக் கேட்டு விடுவாள் என்று அதற்குப் போய் இத்தனை பேர் முன் கேலி பண்ணுகின்றாய் என அதட்டி  விட்டு மருமகள் வசந்தி வந்ததும் எதுகுமே நடக்காதவை போல் இருந்தார் பாட்டி.  வசந்தி சிறு முறைப்போடு கொசுபத்தியை வைத்து விட்டு அமர்ந்தாள்  கணவன் துரை அருகே போகாமல்  மேரி அக்காவின் அருகே  இதைப் பார்த்த துரை மெதுவாக சிரித்து விட்டு தலையணையின் மேல் தலையைச் சாய்த்தான் பாட்டி கதையை ஆரம்பித்தார் )

நீண்ட வரிசையில் நெடு நேரமாய்க் காத்திருந்த மருத்துவரிடம் ஒரு பணியாள் வந்து கூறினான் வைத்தியர்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள்  .தாங்கள் எல்லோரையும் சாந்திப்பதற்காக மகாராணி வர தயார் ஆகி விட்டார் நீங்கள் எல்லோரும் அமைதி காத்திடுங்கள் நன்றி எனக் கூறி விட்டு அருகே அவனும் நின்று கொண்டான் இன்னும் சற்று நேரத்தில் சில காவலாளர்களோடு நாட்காலியும் 
வந்தது  அவ்விடம்  எல்லோருமே அமைதியானார்கள் மந்திரி உட்பட படைத் தலைவன் முன் வர பின்னாடி மகாராணி  மணி மகுடம்  அணியாக் கிளியாய் தங்கம் பூத்த கொடியாய் நிலவைத் திருடிய மதியாய் அன்னம் பயிற்சி கொடுத்த நடையாய் வான வில்லே வளைந்துச் சுற்றிய உடலாய் கலையான முகத்திற்கு திலகமில்லாச் சிற்பமாய் பவனி வந்தார் வைத்தியர்கள் அனைவரும் கை கூப்பி வணக்கம் வைத்திட மகாராணியும் தன் பங்குக்கு கைகளை உயர்த்தி ஆமோதிப்பதும் வரவேற்பதுமாக சைகை காட்டி விட்டு அமரச் சொன்னார் தானும் அமர்ந்து கொள்ள எதிரே மந்திருயும் அமர்ந்தார் இருவருக்கும் இடையில் படை வீரன் நின்று கொண்டு இருந்தார்.   வைத்தியர் தேர்வு தொடங்கியது ஒவ்வொரு வைத்தியராக எழுந்து நின்று தங்கள் அனுபவம் பற்றியும் எத்தனை ஆண்டு காலமாய் இத் தொழில் செய்கின்றனர் எனவும் தாங்கள் எத்தனை விதமான. நோய்களை தீர்க்கும் வல்லமை பெற்றவர்கள் எனவும்  இவர்களின் குரு யார் இல்லை இது பரம்பரை த்தொழிலா  பாட்டி வைத்தியமா முறையாக கற்றுக் கொண்டதா எந்த நாடு எந்த தேச. குடும்பம் பற்றி முழுமையான விளக்கம் என்று இப்படி பல கேள்விகளை மந்திரியார் கேட்க வந்தோர் ஒவ்வொருத்தரும் பதில் கொடுக்க மகாராணி கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தார் .

 (எனப் பாட்டி சொல்லியதும் மேரி அக்கா கணவர்  கிருஸ்ரின் சொன்னார்  மகாராணி மட்டுமா பெரியம்மா கேட்டுக் கொண்டு இருக்கார் நாங்களும் தான் கேட்டுக் கொண்டு இருக்கோம் தூக்கம் முழிச்சு  என சொல்லி சிரித்தார்  பாட்டி உடனே கிருஸ்ரினைப் பார்த்து நீயூமாடா வாயைத் திறந்துட்டா சரியாப் போச்சு போ  வேறு என்ன பெரியம்மா சொல்ல மருத்துவர் போல் தான் நாங்களும் காத்திருக்கோம் எப்படா அடுத்த திருமணம் அது என்னாகுமோ என்று பதட்டத்தோடு என்றார்    ஓகோ இது வேறயாடா  என்று பாட்டி சிரிக்க ஓம் பெரியம்மா என்றார் கிருஸ்ரின் 
(தொடரும்)

கலா


 


Post a Comment

0 Comments