குறள் 677
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
மாப்ள.. புதுசா எதாவது செய்யப் போறன்னா, ஏற்கனவே அதைப்பத்தி தெரிஞ்சவனை பாக்கணும். அவங்கிட்ட அதைப்பத்தி அவனோட கருத்து என்னன்னு நல்லா விசாரிச்சு தெரிஞ்சுக் கிடணும் மாப்ள.
குறள் 678
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
தம்பி.. ஒரு வேலையைச் செய்யும்போது, அந்த வேலையை வச்சே வேற ஒரு வேலையையும் செஞ்சு முடிச்சிறணும். அதாவது ஒரு யானையை வச்சே இன்னொரு யானையை பிடிப்பாங்கல்லா. அது மாதிரி தம்பி..
குறள் 679
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
மாப்ள..ஏற்கனவே நம்ம கூட்டணியில இருக்கவொளுக்கு ஒதவி செய்தது சரிதான். அதை விட எதிர்கட்சியில இருக்கவொளுக்கு சட்டு புட்டுன்னு ஒதவி செஞ்சு வெரசலா வளைச்சுப் போடணும் மாப்ள.
குறள் 680
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
மாப்ள.. நம்மளை விட வலிமையா இருக்கவொளை எதுத்து நிய்க்கதுக்கு நம்ம கூடச் சேந்தவொ நடுங்குவாவொ. அந்த நிலைமையில, அவொளால நமக்கு எதாவது நன்மை கிடைய்க்கும்னா, அவொ பெரியவொ தாம் னு ஏத்துக்கிட்டு இணக்கமா போறது நல்லது மாப்ள.
குறள் 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
தம்பி.. அரசாங்கத்துக்கு ஒரு நல்ல தூதனா இருக்கணும்னா அவனுக்கு என்னல்லாம் இருக்கணும்னு தெரியுமா?
1. அன்பான கொணம் வேணும்.
2. பெருமையான குடும்பத்து ஆளா இருக்கணும்.
3. அரசுக்கு பிடிச்ச மாதிரி நல்ல பண்பு.
இந்த மூணும் கண்டிப்பா வேணும் தம்பி.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments