Ticker

6/recent/ticker-posts

அன்பு மகளே!


பொன் மலரே
எந்தன் பூந்தளிரே...

நின் முகம்
பார்த்தே மகிழ்ந்திடுவேனே...

பெண்ணின் பெருமை
காத்திடு நீயே...

பொன்னாய் மணியாய்
என்றும் ஒளிர்வாய்..

மகளே நீயே
விளக்கேற்றும் விளக்கு...

உந்தன் ஒளியினில்
இல்லறம் ஒளிரும்...

உன்னவன் மனதில்
என்றும்  நின்றே...

நல்லறம் காப்பது
பெண்ணவள் குணமே...

.உற்றார் உறவினர்
மனமதை வென்றே...

பெற்றார் பெயரை
காத்திடு நன்றே...

 குறுநகை வீசியே
உறவதை நேசி...

கல்ஹின்னையூர் இப்னு ஸுபைர்


 


Post a Comment

0 Comments