Ticker

6/recent/ticker-posts

குரல் ஓசை கொடுக்கும்!


வண்ண விளக்குகள் எரியும் 
எண்ணப்படி மங்கயர்களும்  
ஆண்களோடு சேர்ந்தே 
ஆடுவார்கள் கால்கள் 
நில்லாமல் தள்ளாடும் போதையில் 
இரவு நேர விடுதியிலே

ஒட்டி ஒரசி முட்டி மோதி  
துள்ளிக் குதித்து
தள்ளி வீழ்த்தி 
கட்டிப் பிடித்து தொட்டு இழுத்து 
அள்ளி அணைத்து ஆடுவார்கள்

தொட்டுக்கவோ கட்டிக்கவோ
உரிமை இல்லாத ஆணோடும் 
இணைந்தே ஆடிடுவாள் 
மயக்க நிலையிலே 

அரை குறை ஆடையும்  
அரை குறை மொழியும்  
அதிகமாகவே தென்படும் 
வந்து விழும் கண்ணிலும் 
காதிலும்  அந்த வேளையிலே

உள்ளாச வாழ்க்கை  
நல்லாவே இருக்கும் 
எல்லை மீறியதும் 
பெண்மை வாழ்வோ 
தெருவிலே பறக்கும் 
பிள்ளையது பாவம் குப்பையிலே
குரல் ஓசை  கொடுக்கும்.

ஆர்.எஸ்.கலா



 


Post a Comment

0 Comments