Ticker

6/recent/ticker-posts

அதிசய பாஷை!


உயிரை அசைத்துப் பார்க்கும்
பிரளயத்தின் முகமும்

கலவரத்தை கட்டிப்போடும்
அமைதிக்கான துளிரும்

இரு மனங்களின் புலனாகாத
இடம் பெயர்தலும்

சம்மதம், எதிர்ப்பு என
இருள் பொருள் தரும் விந்தையும்

ஆழமான வலி, மகிழ்வின் உச்சம் 
என இரு குணங்களை 
வெளிக்காட்டும் விசித்திரமும்

பிரமிப்பு தான்

எழுத்து வடிவம் இல்லையெனினும்
மௌனம் என்பது 
ஒரு அதிசய பாஷை ...

ஐ.தர்மசிங்
நாகர்கோவில்..




 


Post a Comment

1 Comments

  1. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    இந்த வார இனிய இதழில் எனது கவிதையும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
    உங்களின் தொடர் ஆதரவிற்கு இதயம் நிறைந்த நன்றிகள் சார்.

    ஐ.தர்மசிங்
    நாகர்கோவில்

    ReplyDelete