Ticker

6/recent/ticker-posts

கோவையில் மாபெரும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி விழா நிகழ்ச்சி


கோவை எக்கனாமிக் சேம்பர்  "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் நடத்தும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு நிகழ்ச்சி 2023 

கோவையில் செயல்பட்டு வரும் சேவை அமைப்பான கோவை எக்கனாமிக் சேம்பர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், "கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி 2023 " என்ற தலைப்பில் 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணாக்கியருக்கு கல்வி ஆலோசனை மற்றும் வழிகாட்டும் நிகழ்ச்சியினை நடத்துகிறது. முற்றிலும் இலவசமாக நடக்கும் இந்நிகழ்ச்சி போத்தனூரில் உள்ள வெட்டிங் பேலஸ் திருமண மண்டபத்தில் ஜனவரி 22 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

துறை சார் பேராசிரியர்களும், நிபுணர்களும், கலை அறிவியல், மானுடவியல், பொறியியல், மருத்துவம்,சட்டம், வேளாண்மை, அரசு தேர்வுகள், போட்டித் தேர்வுகள், தலைமைப் பண்பு, போன்ற பல்வேறு துறை சார்ந்த படிப்புகள் பற்றி மாணவ - மாணாக்கியர் களுக்கு உரையாற்றி வழி காட்டுகின்றனர்.

இவ்விழாவில், திருக்குறள் முரசு, தமிழ்ச் செம்மல், முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்கள் எழுதிய "சிந்தனையைத் தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்" நூல் அறிமுக வெளியீடும் நடைபெற உள்ளது.

இந் நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியாளர், கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர், கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவச் செல்வங்களிடையே உரையாற்றுகின் றனர்.

இந்நிகழ்ச்சியில் இளம் சாதனை யாளர்கள்  கண்டுபிடிக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டு, கௌரவிக்கப்பட உள்ளனர்.


இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணாக்கியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர்.

இந்த நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவை எக்கனாமிக் சேம்பர் நிர்வாக குழு செய்துள்ளனர்.

செய்தி அறிவிப்பு :
மூத்த தமிழாசிரியர்,
தமிழ்ச் செம்மல்,
முனைவர் மு.க.அன்வர் பாட்சா...
கோயம்புத்தூர், தமிழ் நாடு.




 


Post a Comment

0 Comments