ராஜகுமாரியின் சுயம்வரம்-15

ராஜகுமாரியின் சுயம்வரம்-15

வண்டியின் வேகம் கூடவே பாட்டிக்கும் கூடிக் கொண்டது உயிர்ப் பயம் "அடேய் முஸ்தபா  என்னடா மயில் போல் பறக்கிறாய் எல்லோரையும் பத்திரமாகக் கொண்டு கோயில் வாசல் முன் இறக்குடா இமலோகாத்துக்கு அனுப்பிடாமல் அப்பப்பா என்ன ஓட்டத்த ஓடுரான் பயப்பிள்ளை படபடக்குது நெஞ்சு" என்றார்.   

இதைக் கேட்டதும் பாட்டியோட பேரப் பிள்ளைகள் எல்லோரும் சொன்னார்காள் "என்ன பாட்டி நீங்க இப்படி பயப்பிடுகிறது பாட்டியை கட்டவண்டியில் தான் கூட்டி போக வேணும் போல" எனக் கூறி கேலி செய்தார்காள்.

மேரியக்காவோட மகள் லூசியா கேட்டாள். "ஏன் பாட்டி அந்தக் காலம் காட்டு வழியே மாட்டு வண்டியில் தானே பயணம் செய்வார்களாம்.அப்போ இரவு வேளையில் பயம் வராதா"? என்றதும் "ம்க்கும்"  என்று முக்கி விட்டு பாட்டி சொன்னார். "அடியேய் புள்ள பேயும் சேர்ந்து எத்தனையோ தடவை மனிதனோடு பயணம் செய்து இருக்காம்.என் அம்மம்மாக் கிழவி சொல்லிச்சு" என்றார் பாட்டி.  

"அய்யய்யோ உண்மையாகவா பாட்டி அப்போ அவங்க பேயைப் பார்த்தார்களாமா?"

"ஓமாம் அவர்கள் எங்கோ போய் வரும் போது இரவு ஒரு மணியாம்.யாரோ இரண்டு பேர் நின்று கொண்டு நாங்காளும் வரலாமா அக்கா அண்ணா கால் வலிக்குது,ரொம்ப நேரமாக நடந்து விட்டோம்,என்று கேட்டார்களாம்.
பார்க்க பாவமாக இருந்துச்சாம் அம்மாம்மாவோடா தோழியின்  புருசனாரு "சரி" என்று ஏத்திக்கிட்டாராம்.

அவர்களைப் பார்த்தால் நல்லவர்கள் போல்தான் தெரிஞ்சுதாம்.
 
வெத்தலை கேட்டார்களாம். கொடுக்கவும் வாயில் போட்ட படி சொன்னார்காளாம்.நெடுகப் போனால்  ஒதிகை மரத்தடியில் இறக்கிடுங்கோ குறுக்கே போனால் குண்டுக் கல்லு.இருக்கு அங்கே இறக்கிடுங்கோ, என்று  இதைக் கேட்டதும் அம்மம்மாவோட மாமனாரு கண்டு புடிச்சுத்தாராம்.கூடவே வருவது யாரு என்று.ஏன் என்றால் அது பேய்கள் வாழும் ஒரு காடு.அங்கே துர்ஷ்ட சக்தியின் ஆட்சி தானாம்.இருளானால் அந்தப் பாதைக்கு யாரும் போக மாட்டார்காளாம்.ஓ. நீங்க அங்கே போக வேணுமா?நாங்க போகும் பாதை அது இல்லையே?இப்போ என்ன செய்யலாம் என்று கேட்டாராம். பேய்கள் இருவரும் கொஞ்சம் முறைப்போடு மரியாதைக் குறைவாகவே கேட்டுச்சாம். அப்போ நீ எங்கே போக வேணும் என்று அவர் அதைக் காதில் வாங்காமல் அவர்கள் அருகே இருந்த அம்மம்மாவையும் மாமியாரையும் கொஞ்சம் முன்பாக வரச் சொல்லி விட்டு அவர் அதன் அருகே அமர்ந்து விட்டாராம். அமர்ந்தவர் அம்மம்மா  கையில் ஒரு பையையும் மாமியார் கையில் ஒரு புத்தகத்தையும் கொடுத்து பிடித்துக் கொள்ளுங்கள் நான் பாடுவதை திரும்ப பாடுங்கள்  மனதை  திடமாக்கிக் கொள்ளுங்கள் என்றாராம். அப்போ அம்மம்மாவும் அவங்களோடு சென்ற ஒரு நவரும் வண்டி ஓட்டியவரும் பேசிக் கொண்டாங்களாம்.நேரம் பொல்லாத நேரம் தானே.அதுதான் இப்படி ஒரு முன் எச்சரிக்கை  போடுகிறார் என்று அம்மாம்மாக்கு மனதில். 
அப்போதுதான் பயம் வந்துச்சாம்.கலியாணம் கட்டிய புதிசாம்.அவங்க. அவரு என்ன செய்தாராம் காவடிச் சிந்து புத்தகத்தை கையில் எடுத்து விரித்தாராம். அப்போது பேய் கேட்டுச்சாம் நேரமாகுது நீ எந்த வழியால் போகிறாய் சொல்லு என்று மாமனார் சொன்னாராம்.நான் அங்காளப் பரமேஸ்வரி வீதியால் போகப் போகிறோம் என்று. கேட்டதுமே பேய்கள் கோபமடைந்து விட்டதாம்.அப்போதும் மனிதர்கள் போல் தான் இருந்துச்சாம்.  .அம்மம்மாவைப் பார்த்து சொன்னாராம். இந்த புள்ள கொஞ்ச நேரம் கண்ணை திறக்காதே நான் சொல்லும் வரை. கையில் இருந்து பையையும் வைத்திடாதே இறுக்கப் பிடி என்றாராம். அம்மம்மா  உண்மையிலே நினைத்தது, பேய்க் காடு வந்துச்சு போல அதுதான் இப்படி கூறுகிறார். நாம் கண்ணை மூடினாலும் திறந்திடுவோம்.சில வேளை பேசாமல் போர்வை போட்டுத்து படுத்துக் கொள்வோம் என்று எண்ணி மூடி முற்றாக கொஞ்சம் கை கால் எல்லாம் மடக்கிக் கொண்டு வண்டியில் ஒட்டினால் போல் படுத்துக் கொண்டாராம். மாமியார் தைரியசாலியாம்.அவ வெத்தலையை துப்பி விட்டு,ஏங்க பாடுங்க நானும் பாடுகிறேன்,இவங்களும் பாடட்டும் என்றாவாம்.அவர் காவடி சிந்து பாட ஆரம்பித்தாராம்.ஒரு நாளு வரி பாடும் போதே அகோரக் குரலில் இரு பேயும் கத்திக் கொண்டு  எழும்பிச்சாம் ஒரே புணவாடை மூக்கை துளைச்சுதாம்.அவர்கள் பாடுவதை நிறுத்தவேயில்லையாம்.

அம்மம்மா அழ ஆரம்பிச்சுத்தாவாம்.கண்ணை திறக்காமலே. பொறுமை இழந்த பேய் மாமனாருக்கு ஓங்கி ஒரு அறை போட்டு விட்டு வண்டியை  குலுக்கி விட்டு மறைஞ்சு போய்த்தாம்.கொஞ்ச நேரத்தில் அந்த நாத்தமும் இல்லையாம்.மாமனார் பாடிய வாறே வந்தாராம். விடியும் வரை அவர் கன்னம் சிவந்தே இருந்துச்சாம். அவருக்கு மந்திரம் தெரிந்ததால் பயப்பிட வில்லையாம்.அம்மம்மாவுக்கும் வண்டி ஓட்டியவருக்கும் உடனே காச்சல் வந்துத்தாம். 
(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post