Ticker

6/recent/ticker-posts

Ad Code



அறிவியல் எழுச்சி!


அறிவை வளர்த்திட
ஆயிரம் வழிகள்
உயிரெனப் பயில்வோம்
உன்னத நூல்கள்

இயற்கை விதிகளில்
இயங்கிடும் நல்லியல்
செயற்கை நுட்பங்கள்
செறிந்திட்ட அறிவியல்

முரண் இடையில்
ஒழுங்கைத் தேடும்
திறன் ஆய்ந்து
தெளிவுறும் அறிவியல்

நிரூபணமும் வரையறையும்
நிறைந்திட்ட அறிவியல்
நிகரில்லா முயற்சியில்
நிலைத்திடும் நன்மைகள்

மருத்துவத்தில் அடைந்திட்ட
மகத்தான வளர்ச்சி
மானிடர் ஆயுள்
மிகைத்திடும் உயர்ச்சி

கற்பனைக்கு எட்டாத
கலையறிவியல் எழுச்சியே
செழுமையும் உயர்வும்
சேர்ந்ததே மனிதவாழ்விலே

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை 



 



Post a Comment

0 Comments