Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-76


குறள் 721
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் 
தொகையறிந்த தூய்மை யவர்.

மாப்ள.. பயன் படுத்துற சொற்களின் சிறப்பு அறிந்த தூய்மையானவங்க இருக்காங்களே.. அவங்க பேசப்போற கூட்டத்துக்கு வந்திருக்க ஆளுங்களோட தன்மையை அறிந்து தான் பேசுவாங்க. தவறா எதுவும் பேசிற மாட்டாங்க மாப்ள. 

குறள் 723
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

மருமவன... பகையை எதுத்து உயிரை விடக்கூட தயங்காதவங்க நெறைய பேர் இருப்பாங்க. ஆனா பெரிய பெரிய அறிவாளிங்கல்லாம் இருக்க இடத்துல போய் அஞ்சாம பேசக்கூடியவங்க கொஞ்ச பேரு தான் மருமவன. 

குறள் 724
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

தம்பி... நாம படிச்சு தெரிஞ்சு வச்சிருக்க எல்லாத்தியும் படிச்சவங்க கிட்ட போய் அவங்க மனசுல பதியுதாப்ல சொல்லணும். நம்மை விட கூடுதலா படிச்சிருக்கவங்க மூலம் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்க கூடுதல் கல்வியை நாமளும் கேட்டு தெரிஞ்சுக்கிடணும் தம்பி. 

குறள் 731
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

# விளைபொருட்கள் செழிப்பா இருக்கணும். 
# குடிமக்கள் நல்லவங்களா இருக்கணும்.
# நல்ல வழியில் செலவு செய்யக்கூடிய பணக்காரங்க இருக்கணும். 

நாட்ல இப்படி இருந்தாத்தான் அது ஒரு நல்ல நாடு. 

குறள் 732
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

# பொருள் வளம் நெறைஞ்சு இருக்கணும். 
# எல்லாரும் அங்க வாழ விரும்பணும்.
# கேடு இல்லாம இருக்கணும். 
# விளைச்சல் நல்லபடியா இருக்கணும்.

இப்படி இருக்க நாடு தான் சிறந்த நாடு.
 
(தொடரும்)


 



Post a Comment

0 Comments