புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-151

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-151


இருசக்கர வண்டியோடு இணைந்து விழுந்த யோகியார், தானும் எழுந்து கொண்டு, வண்டியையும் எடுத்து நிறுத்தியதும், புராதன நூல்  தேடிவந்த   நினைப்பு மறந்து போனவராக செயல்படலானார்.  பொதுவாக அறுபது வயதைத் தாண்டிவிடும் மனிதர்களுக்கு இவ்வாறாக ஏற்பதும் மறதிநிலை 'டிமென்சியா'(Dementia)என்று அழைக்கப்படுவதுண்டு.

தனது  பத்து வயதில், 'கிரீடி'யில் அவர் துவிச்சக்கர வண்டி ஓடியது நினைப்பு இப்போது அவருக்கு வந்துவிட்டது. 

ஏழு தசப்தங்களுக்குப் பின்னரும் தொடராக   துவிச்சக்கர வண்டி ஓடிய பயிற்சி இல்லாதிருந்த அவரால் இப்போது ஓட முடியுமா என்ற கேள்வி தனக்குள் எழுந்தபோதிலும், முயற்சி செய்துதான் பார்த்து விடுவோமே என்று நினைத்தவராக, வண்டியைத் தள்ளிக் கொண்டு, சமாந்திரமான ஓர்  இடத்திற்கு வந்தார்.   

பின்பக்கமாக வண்டியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு வந்தனர் அவரது சகாக்கள்.  தரைப்பகுதி வந்ததும் யோகியார், துவிச்சாக்க்கர வண்டியில் ஏறினார். மெதுவாக மிதித்து அவர் முன்னேறிய சிறிது நேரத்தில், வண்டியில் இருந்தும் விழுந்து விட்ட அவரது கை, கால்களிலெல்லாம் சிராய்வுகள் ஏற்பட்டு இரத்தம் கசியலானது. சகாக்களில் ஒருவர் ஓடிச்சென்று மூலிகை ஒன்றைப் பிடுங்கிவந்து, அதன் இலைகளை நசித்துக் காயங்களில் தடவினார்.

அந்த இடத்திலேயே கொஞ்சநேரம் இளைப்பாறிய பின்னர், யோகியார் வண்டியைத் தள்ளிச் சென்று, கல்லிடுக்கில் வைத்தபோதுதான் சற்றுத் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த சிற்றாறு ஒன்று அவரது கண்களில் பட்டது!

செரோக்கியும், ரெங்மாவும்  இர்வினின்  ஒப்படை சமர்ப்பண வைபவத்தில் கலந்துகொல்லச் செல்வதற்காகத் துணிமணிகள் எடுப்பதற்கு நகருச் செல்லும்போது, நீராடிய அதே  சிற்றாறு!

அதில் இறங்கி நீராட வேண்டுமென்று யோகியார் நினைத்தார்.  சகாக்கள் பின்தொடர, அவர் ஆற்றுக்குள் மெல்ல இறங்கினார். அவரைத் தொடர்ந்து சகாக்கள் ஒவ்வொருவராக ஆற்றிற்குள் குதிக்கலாயினர்.

தனது சிறுபிராயத்தில் 'கிரீடி'யில் இருந்த   குளம் ஒன்றில் நண்பர்களுடன் நீந்தி விளையாடிய ஞாபகமும், அதன் பின்னர் அவ்வப்போது கல்லடிவாரத்திலிருந்த  குட்டை ஒன்றில் சிரட்டை கொண்டு பல வருடங்களாகக் குளித்து வந்ததை நினைத்துப் பார்க்கின்றார்.

அந்தவகையில் இந்த ஆற்று நீரின் குளிர்ச்சியும்,  முங்கிக்குளிப்பதன்  புதிய அனுபவமும் அவருக்குப் பிடித்திருந்தது!
(தொடரும்)




 



Post a Comment

Previous Post Next Post