ராஜகுமாரியின் சுயம்வரம்-16

ராஜகுமாரியின் சுயம்வரம்-16

லூசியா கேட்டாள் உடனே இது உண்மையாகவா பாட்டி இல்லை ராஜகுமாரியின் கதை போல என்று.

அதற்கு பாட்டி சொன்னார் "அடி போடி இவளே இது உண்மையடி என் அம்மாவோட அம்மா சொன்னவை அதை சொல்லும் போதே நடுங்குது என்று சொல்வார் அம்மாவும் சொன்னாங்க. அவங்களிடம் நிறையத் வாட்டி தாத்தா சொல்வாராம்" என்று என பாட்டி கூறவே  ஆ என வாயைப் பிளந்த பேரன் உதயன் சொன்னான்.

"முஸ்தபா  அங்கில் யார் கையைக் காட்டினாலும் வேணை நிறுத்தாதிங்க."  என்று.

 "ஏன்டா உதயா என்னை கம்பி எண்ண வைக்கப் போறாயா" என்று புன்னகையோடு கேட்டான் முஸ்தபா.  

"இல்லை அங்கில் பேய் கையைக் காட்டினால் கண்டு பிடிக்க தெரியாதே உங்களுக்கு அதுதான் யாரையும் ஏற்றாதிங்க என்றேன்"  எனக் கூறி விட்டு மீண்டும் உதயனே கேட்டான்.

"ஏன் அங்கில் கம்பி எண்ணப் போவதாகக் கேட்டீர்கள்" எனக் கேள்வியோடு முஸ்தபாவைப் பார்த்தான்.

 "அதுவாடா உதயா நீ சொன்னாயே கையைக் காட்டினால் நிக்காதே என்று பொலிஸ் காட்டும் போது நான் நிறுத்தாட்டி அவன் என்னை தூக்கி கூண்டில் போடமாட்டானாடா அதைச் சொன்னேன்"  என்றான்.

 எல்லோரும் சிரித்தார்கள்.  

"நேரம் போனதே தெரியல பாருங்க. ஒரு மணியாகப் போகிறது  .என்றாள் மூத்த மருமகள்.

"ஆமாம் அக்கா" என்ற சின்ன மருமகள்  புருசனைப் பார்த்துச் சொன்னாள்.

"என்னங்க. போற வழியில் பெரிய மர நிழலைப் பார்த்து நிறுத்துங்க இறங்கி காலைக் கையை ஆட்டி கொஞ்சம் இருந்து சாப்பிட்டு விட்டு போவோம் பசி வந்து விட்டது மாமி வேறு மாத்திரை போட வேணும்" என்றாள்.

அவனும் "சரி" என்று விட்டு "முஸ்தபா   பார்த்து நிறுத்துடா இவள் சொன்னது போல் மரத்தடியில்" என்றான்.

முஸ்தபாவும் "சரிடா மச்சான்" என்றவாறே வேனை ஓட்டினான். 

ஒரு 30 நிமிடங்கள் தான் வேன் ஓடி இருக்கும். அழகான ஒரு தென்னம் தோப்பு கண்ணில் பட்டது. அங்கே பலர் அமந்து இருப்பதும் தென்பட்டது. முஸ்தபா அங்கே வேனை  நிறுத்தினான்.   

முன்னதாக அமர்ந்திருந்தவர்களின் கண்கள் இவர்களைப் பார்த்தது  இனி மெது மெதுவாக எல்லோரும் இறங்கினார்கள். அறியாத தெரியாத முகமாக இருந்தாலும் பார்த்ததும் புன்னகையை பரிமாறிக் கொண்டார்கள்.

அவர்களும் அந்த ஆலயத்தை நோக்கி போனவர்கள் தான். மேரி அக்காவுக்கும் மகளுக்கும் இவை புதிய அனுபவம்.இவர்களும் ஓர் நிழல் பார்த்து பாயை விரித்து அமர்ந்தார்கள்.  அங்கு அமர்ந்திருந்தோர் கண்கள் எல்லாம் சுற்றும் முற்றும் பார்த்தும் மேல் நோக்கிப் பார்த்தும் வியப்பில் ஆழ்ந்தன.

சூழல் அவ்வளவு அழகு தென்னையிலே குலை குலையாக தேங்காயும் இளநீரும் இடையிடையே குயிலின் குரலோடு சேர்ந்து காகத்தின் இசையும் அருகே சிறிதளவு நீர்த்தேக்கம்  பச்சை பசலே என புல்வெளி  "ஆஹா அருமையான இடம் போட்டோ எடுக்க. பாருடா உதயன்" என்றாள் லூசியா. 

"ஆமாம் அக்கா வாங்க போட்டோ எடுப்போம்" என்று கூறியவன் "அப்பா உங்க போனை தாங்கள்" என்று தந்தையிடம் கேட்டு வாங்கிக் கொண்டு லூசியா உதயனோடு வாண்டுகளும் சேர்ந்து கொண்டன.

சற்று தூரம் போய் நின்று மாறி மாறி புகைப்படங்கள் எடுத்தார்கள் அப்போது அங்கே சில ஆண் பெண் நண்பர்களும் பேசிக் கொண்டே வந்தார்கள்.  

அதில் ஒருவன்  "கிருஸ்ரின் கிருஸ்ரின் காதில் லூசியா அக்கா" என்று உதயன் அழைத்தது நன்றாகவே விழுந்தது. அப்போதே கண்டு பிடித்து விட்டான் இவள் நம் மதத்துப் பெண் என்பதை. லூசியா மேல் ஒரு ஈர்ப்பு அவனுக்கு வந்திடவே செல்பி எடுப்பதாக பாவனை காட்டி அவளின் உருவத்தையும் தன் போனில் அடைத்துக் கொண்டான். 

மெதுவாக உதயனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு லூசியாவையே பார்த்தான். 

இதைக் கவனித்த லூசியா தன் இருப்பிடம் நோக்கி விரைந்தாள். அவள் அங்கு இருந்து போனது கிருஸ்ரினுக்கு சாதகமாச்சு. ஏன் என்றால் உதயன் கையில் இருந்தது லூசியா போன். உதயன் போன் லூசியா கையிலே கொண்டு சென்று விட்டாள். படபடப்பில் போன் மாறிப் போச்சு அடடா காலம் நமக்கு சாதகமாச்சு என்று எண்ணிய கிருஸ்ரின் உதயனிடம் தான் அழகாய் போட்டோ தன் போனில் எடுத்து அனுப்புவதாய்க் கூறி புகைப் படம் எடுத்து விட்டு நம்பர் சொல் அனுப்புகிறேன்.  என்றான் ஏதும் அறியாதா உதயன் நம்பரைக் கொடுத்து விட்டான்.
(தொடரும்)




 



Post a Comment

Previous Post Next Post