மங்காத மணி போலவே....

மங்காத மணி போலவே....


பெண்ணே குவலயத்தின் ஒளிரும் விளக்கு
பொறுமையே அவளது அழியாத சொத்து

அன்பின் பெருக்கம் அழகின் இருப்பிடம்
அணையாமல் இருக்கும் இன்பத்தின் பிறப்பிடம்

எல்லோர் நலனிலும் அக்கறை அதிகம்
ஐயமே இல்லையவள் தியாகத்தின் தடாகம்

குறையே இல்லாத குருவாய் வந்தவள்
குலமகள் இவளைக் குவலயம் வாழ்த்தட்டும்

மலரின் மென்மை மனதில் ஏந்தியவள்
மலைபோல உறுதியும் தன்னிடம் கொண்டவள்

மழலைச் சிரிப்பில் சிந்தை மயங்குவாள்
மடிமீது உறங்கிடவே  தன்னுறக்கம் துறப்பாள்

கணவன் பணிவிடை பாங்காய்ப் புரிவாள்
பாசத்தை மழையாய்ப் பாரினில் பொழிவாள்

மானுடம் தழைக்கவே மாண்பு செழிக்கவே
மாதரே வாழ்கவே மங்காத மணிபோலேவே

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை





 



Post a Comment

Previous Post Next Post