திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-77

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-77


குறள் 735
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு.

தனித் தனி அணியா இருக்கிற தொண்டர்கள்.. கூட இருந்தே குழி பறிக்கிற வேலையை செய்யுத ஆளுங்க.. தலைமைக்கு நெருக்கடி கொடுக்க கலகக்காரர்கள்.. இப்படிப்பட்டவங்க இல்லாத நாடு தான் சிறந்த நாடு. 

குறள் 739
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

என்னத்தையெல்லோமோ செஞ்சு வசதியான நாடுகள் இருக்கும். அது எல்லாத்தியும் விட, இயற்கையிலேயே எல்லா வளங்களும் இருக்க நாடு தான் சிறந்த நாடு. 

குறள் 740
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

நாட்டுல எல்லா வளங்களும் நெறைஞ்சு இருக்கலாம். ஆனா ஆளுபவன் மீது மக்களுக்கு அன்பும், மக்கள் மீது ஆளுபவனுக்கு அக்கறையும் இல்லாம இருந்தா, அந்த வளங்களால ஒரு பயனும் இல்லை. 

குறள் 769
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.

கொறைஞ்ச எண்ணிக்கையில உறுப்பினர்கள்.. வழி நடத்துத தலைவர் மீது வெறுப்பு.. நிதிப் பற்றாக்குறை.. 
இதுல்லாம் இல்லாம இருந்தா, அந்த இயக்கம் வெற்றி பெறும்.

குறள் 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

நட்பு மாதிரி அருமையானது எதுவுமே கிடையாது. அது மாதிரி தான், என்ன செய்யணும்னாலும், நட்பு இருந்துட்டா போதும். அதை விட பாதுகாப்பானது வேற எதுவுமே கிடையாது.
(தொடரும்)




 



Post a Comment

Previous Post Next Post