Ticker

6/recent/ticker-posts

Ad Code



பெயர்கள்தான் என்ன!


எப்படி சொல்வேன்
உன்னை சில கணமே 
நான் பார்த்தது....!!

உனக்குள் நீ எழுதிக்கொண்ட
மரபுக் கவிதைகளை
எனக்குள் நான் சப்தமின்றி
வாசித்துப் பார்த்தேன்
சொல்லினிது பொருளரிது....!!

அய்யய்யோ..... வேண்டாம்
பேசிவிட்டால் விழிகள் விலாசம் கேட்கும்
மனம் தூதனுப்பும்
கலவரம் நடக்கும்
நிலவரம் சரியில்லை......!!
தூரமிருந்தே 
சிநேகம் கொள்வோம்......!!

அவசர அவசரமாய் வந்த அலைச்சலில்
கைக்குட்டை எடுத்து 
வியர்வை துடைத்தபடி
பயணிகள் நெரிசலிலும்
பார்வைகள் நொறுங்காமல்
பார்த்துக் கொண்டோம்.....!!

நீயும் நானும்
ஏதோ அவசர ஆர்ப்பாட்டத்தில் வந்ததை
பயணிகள் கவனித்தனர்
அதை அறிந்து நமக்குள் நாமே 
சிரித்துக்கொண்டோம்......!!

தூரத்தில் வரும் பேருந்து
நமதாக கூடாதா என எண்ணம்
 உள்மனதில் ஓடிக்கொண்டிருக்க 

பேருந்து வந்ததும்
நான் இங்கே
நீ பேருந்தின் 
கடைசி படிக்கட்டோடு நின்று
கையசைத்த கடைசி நிமிடங்களிலும்
சொல்லிக்கொள்ளவே இல்லை
நம் பெயர்களை......!!

கவிஞர் கோ.டோன்குமார்
வேலூர்




 



Post a Comment

0 Comments