ராஜகுமாரியின் சுயம்வரம்-17

ராஜகுமாரியின் சுயம்வரம்-17

கிருஸ்ரின் நினைத்ததை அடைந்து விட்டான்.உள்ளூரம் குளுந்து விட்டான்.  

"சரி அண்ணா நன்றி நான் போகிறேன் அம்மா தேடுவாங்க Bey" என்று  கையை அசைத்து விட்டு உதயன் தன்னோட உறவுகள் இருக்கும் இடத்திற்கு விரைந்தான். 

உதயனைக் கண்ட லூசியா "அடேய் மண்டு கொண்டாட என் போனை.என்னடா செய்தாய் போனில்" என்று கேட்ட வாறு போனை வாங்கி  ஆராய்ந்தாள்.  

உடனே  ஒரு "ம்க்கும்" போட்டு விட்டு சொன்னான் "அக்கா உங்க போன் என்ன பலாப்பழமா நான் தோண்டி சாப்பிட வாங்கியதும் உள்ளே போய் நோண்டிப் பார்க்கிறீங்க. ச்சும்மா போட்டோ தானே பிடித்தோம்" என்றான்  உதயன்.

அதைக் கேட்ட மேரி கேள்வி தொடுத்தாள். "பிடித்தோமாடா உதயா?  ஆமா அண்டி  அக்காவும் நானும் தான் ஓ அதையா நீ சொன்னாய்" என்ற மேரி அக்கா கவனத்தை திசை திருப்பினார். 

அப்போது அந்தப் பக்கம் இந்தப் பக்கமாக போன குடும்பத்தார் எல்லோரும் ஒன்று சேர்ந்தார்கள்.அவர்கள் அனைவரும் அமர்ந்ததும் சின்ன மருமக பாட்டியைப் பார்த்து ஒரு சிறுதளவு பாத்திரத்தை நீட்டி "இதில் கையைப் பிடிங்கள் மாமி.கை கழுவிட நீர் ஊற்றுகிறேன்? என்றாள். 

பாட்டியும் சரிமா என்ற வாறு கைகளை நீட்டிக் கழுவ ஆரம்பித்தார்.  

மருமக சொன்னாள். "அதுதான் மாமி சோப்பு எடுங்க" என்று. பாட்டி சோப்புப் போட்டு கழுவி விட்டு கைகளை தனது முந்தானையிலே துடைத்துக் கொண்டார். பெரிய  வேசன் ஒன்றை பாட்டியின் முன் வைத்த மருமகள் மார் இருவரும் ஒவ்வொரு பண்டமாய் எடுத்து அதற்குள் போட்டார்கள். 

சோறு அப்பளம்.  வெந்தயக் கறி "ஆஹா வாசன தூக்குதே  அண்ணி தானே சமைத்தது இதை" என்று மூத்த மருமகளைப் பார்த்து முஸ்தபா கேட்டான்  .

"ஆமான்டா அவதான் செய்தா" என பாட்டிதான் பதில் கொடுத்தாங்க. மூத்தவ புன்சிரிப்புக் காட்டி விட்டு வேலையில் முன்முறமாக இருந்தாள். "எங்கே அக்கா கீரைக் கூட்டு" என்று மேரியிடம் கேட்டாள் சின்னவ. "இதோ இந்தா பிடி" என்று மேரி தூக்கிக் கொடுத்தார் 

அனைத்தையும் வேசன் உள் போட்டதும் பாட்டி தன்னோட கையால் பிசைந்து ஒரு பெரும் உருண்டை பிடித்து எல்லோருக்கும் கைகளில் வைத்தார்.

அவர்கள் அனைவரும் சுவைத்துச் சுவைத்து உண்டார்கள். கேட்டுக் கேட்டுக் கொடுத்து விட்டு இறுதியாக ஒரு பிடி சாதத்தில் நீர்மோர்  ஊற்றி கரைத்து விட்டு பாட்டி குடித்தார். பாட்டியால் மென்று சாப்பிட சிரமமாக இருந்தமையால்.

பாட்டியின் வெத்தலைப் பையைக் கேட்டு வாங்கி வாய் நிறைய கொதப்பிக் கொண்டான் முஸ்தபா.இனி என்ன போகத் தயாரானார்கள்.

அப்போது அவர்கள் அருகே இருந்த பலர் சென்று விட்டனர் ஒரு வாகனம் போனால் இரு வாகனம் அங்கே வந்து நிறுத்தப் படுகிறது.இனி அவர் அவர் இருக்கை தான் வேணும் என்னும் சண்டையோடு ஏறிக் கொண்டார்கள். ஒரு வழியாக வேன் மீண்டும் வேல் முருகன் பாடலோடு மயில் வேகத்தில் வீதியில் பறக்கத் தொடங்கியது.
(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post