தூங்குவதற்கு முன் தொப்புள் பகுதியில் எண்ணெய் தடவிக்கொண்டால் கிடைக்கும் பலன்கள்

தூங்குவதற்கு முன் தொப்புள் பகுதியில் எண்ணெய் தடவிக்கொண்டால் கிடைக்கும் பலன்கள்


ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன் வயிற்றில், தொப்புள் பகுதியில் எண்ணெயை தடவிக் கொண்டு தூங்குவதால்  நமது சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு, மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. மேலும் இதனால் நமது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் உள்ள பாதிப்புகளை சரி செய்து அவை சிறப்பாக செயல்பட உதவுகின்றன.
“பெச்சொட்டி சுரப்பி” என அழைக்கப்படும் ஒன்றினால் இவை இணைக்கப்பட்டுள்ளதாக பலர் கூறுகின்றனர். ஆனாலும் இதனை அங்கீகரிக்கும் வகையில் நவீன மருத்துவம் எந்தவித கருத்தையும் வெளிபடுத்தவில்லை,  இவ்வாறு வயிற்றில் எண்ணெய் தடவிக் கொண்டு தூங்குவதால் என்னென்ன விதமான நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இப்போது பார்ப்போம்..

நெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
தூங்குவதற்கு முன் மூன்றிலிருந்து ஏழு சொட்டுக்கள் வரை நெய் மற்றும் தேங்காய் எண்ணெயை தொப்புள் பகுதியில் ஊற்றி, நன்றாக அரை அங்குலம் வரை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் கண்களில் உள்ள வறட்சி நீங்குவதுடன் கண் பார்வையும் அதிகரிக்கும்.

கடுகு எண்ணெய்
தூங்குவதற்கு முன் மூன்றிலிருந்து ஏழு சொட்டுக்கள் வரை கடுகு எண்ணெயை தொப்புளில் தடவி நமது வயிற்றுப் பகுதி முழுவதும் அதனை மசாஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் மூட்டுகளில் உள்ள வலியை போக்க இது உதவுகிறது.

ஆமணக்கு எண்ணெய்
தூங்குவதற்கு முன் மூன்றிலிருந்து ஏழு சொட்டுக்குள் வரை ஆமணக்கு எண்ணெய் தொப்புளில் தடவி அரை அங்குலம் வரை படரவிட்டு மசாஜ் செய்யலாம். முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி போன்றவை குணமாகும். உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்துமே வலிமை பெறும்.

வேப்பெண்ணெய்
முகத்தில் உள்ள முகப்பருக்களை போக்குவதற்கும், சருமத்தை பளபளப்பாக வைக்கவும் மூன்றிலிருந்து நான்கு சொட்டுக்கள் வரை வேப்பெண்ணெயை இரவு உறங்க செல்வதற்கு முன் தொப்புளில் தடவி நன்றாக அரை அங்குலம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினசரி இரவு தூங்குவதற்கு முன் செய்து கடைப்பிடித்து வர கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்று பலர் கூறுகின்றனர்.




 



Post a Comment

Previous Post Next Post