இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் 1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தரமான ஆட்டங்களில் ஒன்றாக இந்த போட்டி பார்க்கப்படுவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் போட்டிகளை டி20 ஆட்டங்கள் மாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் டெஸ்டின் தனித்துவத்தை நிரூபித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்கை முதலில் தேர்வு செய்ய, இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 355 ரன்களும், நியூசிலாந்து அணி 373 ரன்களும் எடுத்தன. 2ஆவது இன்னிங்சில் 302 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழந்தது. இதையடுத்து, 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடர்ந்தது. நேற்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், 1 விக்கெட்டை இழந்து 28 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் 257 ரன்களை எடுத்தால் நியூசிலாந்து அணியும், 9 விக்கெட்டை கைப்பற்றினால் இலங்கை அணியும் வெற்றி பெற்று விடும். மேலும், இந்த போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து வெளியேறி, இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும். இத்தகைய காரணங்களால் இன்றைய ஆட்டம் மிகப்பெரிய அளவில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. களத்தில் கேன் வில்லியம்சன் – டாம் லாம் இருந்த நிலையில், அணி 50 ரன் எடுத்திருந்தபோது, லாதம் 25 ரன்னில் வெளியேறினார். 90 ஆவது ரன்னில் ஹென்றி நிகோல்ஸ் 20 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து இணைந்த வில்லியம்சன் – ஹென்றி நிகோல்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. வில்லியம்சன் நிதானமாக விளையாட மிட்செல் ஒருநாள் போட்டிகளைப் போன்று விளையாடி ரன்களை சேர்த்தார். 86 பந்துகளை எதிர்கொண்ட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து அணி வெற்றி பெற கடைசி 10 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் அற்புதமாக செயல்பட்ட இலங்கை பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் ஆட்டம் இலங்கையின் பக்கம் சாய்ந்ததுடன், கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்டை இழந்திருந்த நியூசிலாந்து அணிக்கு, வெற்றி பெற 37 ரன்கள் தேவைப்பட்டது. இதன்பின்னர் கேன் வில்லியம்சன் தனக்கே உரிய நிதானத்துடன், ஆட்டத்தை எடுத்துச் சென்றார். கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் 2 பந்துகளில் சிங்கிள் கிடைத்தது. 3 ஆவது பந்தில் விக்கெட் விழ கடைசி 3 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது 4 ஆவது பந்தில் அற்புதமாக வில்லியம்சன் பவுண்டரி அடித்தார்.இதனால் 2 பந்துகளில் 1 ரன் தேவை ஏற்பட்டபோது 5 ஆவது பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. கடைசி பந்தில் ஹூக் ஷாட் அடிக்க வில்லியம்சன் முற்பட்ட போது பந்து தவறி கீப்பரை நோக்கி சென்றது. அப்போது 1 ரன் ஓடிய வில்லியம்சன் அணியை வெற்றி பெற வைத்தார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments