Ticker

6/recent/ticker-posts

பட்டினியாக இருங்கள்; இறைவனைப் பார்க்கலாம்' - கென்யாவில் சமயக் குழுவுக்குத் தொடர்பில் 21 சடலங்கள் கண்டுபிடிப்பு


கென்யாவில் பட்டினியால் மாண்ட சிலர் சேர்ந்த சமயக் குழு விசாரிக்கப்படுகிறது.

மலிண்டி (Malindi) நகருக்கு அருகே உள்ள காட்டில் குழுவின் தொடர்பில் 21 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 


அவற்றில் 3 பிள்ளைகளின் சடலங்களும் அடங்கும்.

எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இறைவனைச் சந்திப்பதற்குப் பட்டினியாக இருக்கும்படி, பாதிரியார் மெக்கென்ஸி நெத்தெங்கே (Makenzie Nthenge) உறுப்பினர்களிடம் கூறியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இரண்டு பிள்ளைகள் பட்டினியால் மாண்டதாகக் கடந்த மாதம் தகவல் வெளிவந்ததை அடுத்து Good News International தேவாலயத்தின் தலைவரான நெத்தெங்கே அதிகாரிகளிடம் சரணடைந்தார்.

அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சமயக் குழுவைச் சேர்ந்த மேலும் நால்வரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மோசமான நிலையில் இருந்த 11 பேர் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நெத்தெங்கே இம்மாதம் 15ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

அவருடன் சம்பந்தப்பட்ட 6 பேர் கைதானதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.

காட்டில் சடலங்கள் இருப்பதாகத் தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு தேடல் பணிகளை மேற்கொள்கின்றனர்.

நெத்தெங்கே மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 2ஆம் தேதி தொடங்கும்.
mediacorp
ஆதாரம் : AFP


 



Post a Comment

0 Comments