Ticker

6/recent/ticker-posts

நலம் வாழ -மருத்துவப் பகுதி -23

சென்ற வார தொடரில் நாம் ஒவ்வொரு ஒவ்வொரு சுவையைப் பற்றியும் நாம் பார்த்தோம். எவ்வாறு ஐம்பூதங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதையும் நாம் பார்த்தோம்.

சரி , எவ்வாறு நமது உணவு நீர் நிலம் ஆகாயம் காற்று நெருப்பு போன்றவற்றோடு தொடர்பு கொண்டுள்ளது என்பது புரிவதில்லை இல்லையா.

 

 சரி ,அதைப் பற்றி இன்று நாம் விரிவாக காணலாம்.

மனித உடல் மற்றும் இந்த உலகம் முழுவதுமே ஐந்து பெரும் பூதங்களால் ஆக்கப்பட்டுள்ளது. இவ்வுலகில் இருக்கக்கூடிய உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தும் இந்த ஐந்து பொருட்களின் கலவையில் தான் அமைந்துள்ளது.

எவ்வாறெனில் எங்கும் நாம் பார்க்கக் கூடிய வானம் ஆகாயம் இவ்வுலகத்திற்கு அடித்தளமாக அமைகிறது

காற்று என்பது இயங்கிக் கொண்டிருப்பதும் உயர்ந்த தன்மையுடனும் மற்றும் உயிர் உள்ள அனைத்து இனங்களுக்கும் மிக முக்கியமான உயிர் சக்தியான ஆக்ஸிஜனை அளிக்கிறது.ஆக்சிஜன் மட்டுமல்ல இன்னும் பல வகையான வாயுக்களை நமக்கு இயற்கை வழங்கி இருக்கிறது.

நெருப்பு என்பது ஜீரணிப்பதற்கும் ஜீரணித்த உணவில் உள்ள எனர்ஜியை சக்தியை உடலில் உறிஞ்சி சேர்க்கவும் செய்கிறது.

நீரானது உடலை குளிரச் செய்து தொடர்ந்து உடலை பாதுகாக்கவும் தாவரங்களை வளர்க்கவும் செய்கிறது

நிலம் அனைத்து உயிரினங்களுக்கும் உணவு மற்றும் தங்கும் இடத்தை அளிக்கிறது.

பொதுவாக இந்த ஐம்பெரும் பூதங்கள் உலகம் முழுவதையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறது.

எங்கு  இந்த ஒருங்கிணைப்பு பாழ்படுத்தப்படுகிறது அல்லது சமநிலை தவறுகிறதோ, அந்த இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை தோன்றுகிறது. உதாரணமாக உலகில் ஏற்படக்கூடிய பூகம்பங்கள் நிலச்சரிவு போன்றவை.

ஆனால் அது  எவ்வாறு நமது உடலை பாதிக்கிறது. ஆம் உலகில் சமநிலை தவறும் போது உலகில் மட்டும் பேரழிவுகள் தோன்றுவதில்லை நமது உடலிலும் கூடத்தான்.

இவ்வாறெனில் நிலம் தன்மை அதிகமாகும் பொழுது உடல் பருமன், நீர் தன்மை அதிகமாகும் பொழுது சளி தொல்லைகள், நெருப்புத் தன்மை அதிகமாகும் பொழுது காய்ச்சல், எரிச்சல், கொப்புளங்கள் போன்றவை நமது உடலில் தோன்றுகிறது.

இவற்றை தான் நமது முன்னோர்கள் வகைப்படுத்தி வாதம், பித்தம், கபம் இன்று மூன்று தோஷங்களை நமது உடலில் பொருத்திப் பார்க்கின்றனர்

.இவை கூடும் பொழுதோ அல்லது குறையும் பொழுதோ நமது உடலில் பல நோய்கள் ஏற்பட காரணமாக அமைகின்றது.

இவற்றிலும் நாம் அடிப்படையான பஞ்சபூதங்கள் எவ்வாறு சமநிலை தவறுகிறது என்பதை பார்க்கலாம்.

வாதம்

பஞ்ச பூதங்களின் சமநிலையில் காற்று மற்றும் ஆகாயத்தின் விகிதம் அதிகமாகும் பொழுது வாதம் ஏற்படுகிறது

பித்தம் 

நெருப்பு மற்றும்  நீரின் விகிதாச்சாரம் அதிகமாகும் பொழுது அவற்றை பித்தம் என்று அழைக்கிறோம்.

கபம்

 நீர் மற்றும் நிலத்தின் விகிதம் அதிகமாகும் பொழுது கபம் ஏற்படுகிறது.

என்ன வேட்டை வாசகர்களே தலை சுற்றுகிறதா ?

இவை எப்படி நமது உடலில் பிரித்துப் பார்ப்பது என்று கேட்பது புரிகிறது.

ஒவ்வொரு வாரமும் நாம் பார்க்கக்கூடிய தலைப்புகள் நமது உடலில் எவ்வாறு நோய் ஏற்படுகிறது, நமது உடலில் என்ன கூடுதல் குறைவு ஏற்படுகிறது காலநிலைகளால் நமது உடல் எவ்வாறு பாதிக்கின்றது இன்னும் பல பல கேள்விகள் அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு நமது உடலை பற்றி நாம் முழுமையாக அறிந்திருப்பது மட்டுமே ....அதற்காகத்தான் ஒவ்வொரு தொடரிலும் நாம் கூறக்கூடிய விஷயங்களை கவனித்துப் பார்த்தோம் என்று சொன்னால் நம்மை நாம் அறிய முடியும்.

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் பொழுது வாதம் பித்தம், கபம் இந்த மூன்று தோஷங்களின் அடிப்படையில் தான் பிறக்கின்றது. அதன் விகிதாச்சாரம் பரம்பரை மற்றும் பெற்றோரின் உணவுப் பழக்கம் வாழும் முறை மற்றும் உணர்வுகளின் அடிப்படையிலும் எந்த சூழ்நிலையில் எந்த பிறை எந்த நாட்டில் பிறக்கின்றது என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் சில விஷயங்கள் வரம்புகளை கொண்டது. எவ்வாறெனில் எந்த நாட்டில் எந்த சீதோசன நிலையில் எந்த பெற்றோருக்கு  பிறந்திருந்தாலும் மூச்சு விட்டே ஆக வேண்டும் சாப்பிட்டே ஆக வேண்டும் தூங்கியே ஆக வேண்டும் பசியை போக்கியே ஆக வேண்டும் என்பதை கூறலாம் அல்லவா .

ஆம் இவை அனைத்தும் அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம். ஆனால் அந்த உணவு என்பது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தவாறு நாம் உணவை பிரித்து எடுத்து உண்கிறோம். இவ்வாறு எடுத்துக் கொள்வது மட்டும்தான் சரியான ஒரு வரைமுறை. எனவே தான் நாம் இவற்றை சரியாகப் புரிந்து கொண்டோம் என்று சொன்னால் நமது உணவில் சில மாற்றங்களை சில சமநிலையை ஏற்படுத்தும் பொழுது நமது நோயிலிருந்து நாம் விளக்கு பெறலாம்.

எனவே இவற்றை குறித்த விரிவான தகவல்களை நாம் அடுத்த வாரம் காணலாம்

என்றும் வேட்டை வாசகர்களுக்காக
உங்களுடன்

Post a Comment

0 Comments