
2023ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இந்திய மாணவி ஜானவி கண்டுலா கொடூரமான சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது அப்பெண்ணுக்கு வயது 23 ஆகும். ஜானவி கண்டுலா விபத்தில் உயிரிழந்திருந்தாலும், அவரின் மறைவு இந்தியா - அமெரிக்கா இரு நாடுகளிலும் பெரும் பரபரப்பை உண்டாகியது. இந்நிலையில், தற்போது இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 29 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரணம் கொடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
2021இல் அமெரிக்கா சென்ற ஜானவி
ஜானவி கண்டுலா ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் சௌத் லேக் வளாகத்தில் உயர்கல்வியை பயின்று வந்தார். இவர் 2021ஆம் ஆண்டில் பெங்களூருவில் இருந்து அமெரிக்காவுக்கு உயர்கல்விக்காக சென்றிருந்தார், 2023ஆம் ஆண்டு ஜனவரி அவர் பட்டம் பெற இருந்தார்.
மணிக்கு 119 கி.மீ., வேகத்தில் சென்ற கார்
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி அன்று ஜானவி சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த போலீஸ் வாகனம் அவர் மீது மோதியது. இதில் 30 மீட்டர் தூரத்திற்கு தூக்கியெறியப்பட்ட ஜானவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்தபோது, வெறும் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் அந்த போலீஸ் வாகனம் மணிக்கு 119 கி.மீ., வேகத்தில் சென்றிருக்கிறது. அநத் போலீஸ் வாகனத்தை காவலர் கெவின் டேவ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
கிண்டல் செய்த போலீஸ் அதிகாரி
இதைத் தொடர்ந்து, 2023ஆம் ஆண்டிலேயே கெவின் டேவ்வின் சக காவலரான டேனியல் ஆடெரர், உயிரிழந்த ஜானவியை விபத்து நடந்த இடத்திலேயே கிண்டல் செய்து பேசிய வீடியோ வெளியானது. அமெரிக்காவில் காவல்துறையினரின் உடலில் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமராவில்தான் அவர் கிண்டல் அடித்தது பதிவாகியிருந்தது. டேனியல் உயிரிழந்த ஜானவியை நோக்கி, அந்த பெண்ணின் உயிருக்கு குறைந்த மதிப்புதான் என்றும் சியாட்டில் நகரம் அவருக்கு பணத்தை கொடுத்தால் போதும் என கிண்டல் செய்யும் தொனியில் பேசியிருந்தார்.
கொந்தளித்த இந்திய மக்கள்
இது அமெரிக்காவில் வசித்து வந்த இந்திய சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி பெரும் எதிர்ப்பையும் சம்பாதித்தது. தொடர்ந்து டேனியல் காவல்துறையில் இருந்தே டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தான் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அதில், தான் வழக்கறிஞர்கள் இதுபோன்ற வழக்கை எப்படி கையாள்வார்கள் என்றுதான் பேசினேனே தவிர அந்த பெண்ணை கிண்டல் அடிக்கும் தொனியில் பேசவில்லை என்றும் வாதாடினார்.
காரை இயக்கிய காவலர் கெவின் டேவ்வும் பணிநீக்கம் செய்யப்பட்டார். கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டியதற்காக டேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 5000 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது. ஆனால் இவர் குற்றவியல் குற்றச்சாட்டுகள் ஏதும் நிறுவப்படவில்லை.
ரூ.262 கோடி இழப்பீடு
இந்நிலையில், சியாட்டில் நகரின் வழக்கறிஞர் எரிகா எவன்ஸ், ஜானவி கண்டுலா குடும்பத்தினருக்கு 29 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க உள்ளதை உறுதிப்படுத்தனார். மேலும், இதில் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சியாட்டில் காப்பீடு திட்டத்தின் வாயிலாக செலுத்தப்படும். இந்திய மதிப்பில் இது ரூ.262 கோடியாகும்.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments