வாழ்வியல் குரல் -(சிந்தனைத் தத்துவங்கள்) "வேண்டுகோள்"-3

வாழ்வியல் குரல் -(சிந்தனைத் தத்துவங்கள்) "வேண்டுகோள்"-3


அத்தியாயம்-3
"வேண்டுகோள்"
            
* இறைவா!! அபாயங்களிலிருந்துஎன்னைப் பாதுகாக்கும்படி உன்னை நான் வேண்ட மாட்டேன்.,ஆனால்,அபாயங்களை எதிர்நோக்கும் பயமற்ற தன்னமயை எனக்குக் கொடு

*என்னுடைய வேதனைகளையும், வலிகளையும் மறைக்கும்படி உன்னை நான் கெஞ்ச மாட்டேன்.ஆனால்,அவற்றை வெல்லும் வலிமையுள்ள இருதயத்தை எனக்குக் கொடு.

*வாழ்க்கைப் போராட்டத்தில் எனக்குத் துணைவர் களை நாடி நிற்கும் நிலை வேண்டாம்.ஆனால்,என்னுடைய சொந்த பலத்திலேயே போராட அருள்புரிவாயாக!!

*பொறுமையில்லா பயத்தில் என்னைப் பதறவிடாதே!!
ஆனால்.,என்னுடைய சுதந்திரத்தைக் காக்க எனக்குப் பொறுமையைக் கொடு.

*வெற்றியை மட்டுமே யாசித்துப் பெறும் கோழையாக என்னை ஆக்கி விடாதே!!ஆனால்,என்னுடைய தோல்விகளையும் நான் ஏற்று,என் உழைப்பாலும், விடாமுயற்சியாலும்,உன்னுடைய பேரருளாலும் வெற்றி அடையும் வாய்ப்பினை எனக்குத் தந்தருள் புரிவாயாக!!
(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post