தன்முனைக் கவிதைகள்

தன்முனைக் கவிதைகள்


பறவை பறந்தவுடன்
வானம் நிரப்பப்படுகிறது
மொத்த வானத்தையும்
உள்ளங்கையில் ஏற்கிறாள் மகள்

திசை தெரியாமல்
பறக்கிறது பறவை
பெண்ணாக பிறந்த்தால்
தொக்கிக் கொள்கிறது இக்கேள்வியும்

தூரமான எல்லைக்கல்
பயணத்திற்கு உகந்தது
மரவட்டை நகரும் அளவிற்கு
பொறுமையில்லை எனக்கு

விதை நட்டு நிமிர்கிறேன்
பழம் கையில் விழுகிறது
தொட்டிலை கட்டியும்
கருணை விழவில்லை வாழ்வில்

அன்பும் காதலும்
வானவில்லின் வண்ணமெனலாம்
மழை வராத காலத்தில்
சிறகடிக்கிறது வெறுப்புகள்

சே கார்கவி கார்த்திக்




 



Post a Comment

Previous Post Next Post