Ticker

6/recent/ticker-posts

ஆஸ்திரேலியா: பேரனுக்குப் போதைப்பொருள் கொடுத்ததாகக் கொள்ளுப்பாட்டி மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவில் 73 வயதுப் பெண் ஒருவர், அவரின் பதின்மவயதுக் கொள்ளுப்பேரனுக்குக் கஞ்சா கலந்த வெண்ணெயைத் தந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பாம் ஆனெட் பிக்கர்ட்டன் (Pam Annette Bickerton) என்ற அந்தப் பெண் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை அவரின் கொள்ளுப்பேரனுக்குக் கொடுத்ததை ஒப்புக்கொண்டார். 

 


அவர் தமக்கு இருக்கும் தூக்கப் பிரச்சினையைக் கஞ்சா கலந்த வெண்ணெயின் உதவியுடன் சமாளித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. 

அவரது கொள்ளுப்பேரன் பலகாரம் தயாரிப்பதற்காக அந்த வெண்ணெயைப்  பயன்படுத்த அவரிடம் அனுமதி கேட்டிருந்தார். பிக்கர்ட்டன் அதற்கு அனுமதியளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

பிக்கர்ட்டன் அந்நேரத்தில் களைப்புடன் இருந்ததால் சரிவர பதில் அளிக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார். 

பிக்கர்ட்டன் தீர்ப்புக்காக அடுத்த மாதம் 4ஆம் தேதி நீதிமன்றம் திரும்புவார். 
mediacorp
-AFP


 



Post a Comment

0 Comments