
டெல்லி அணியுடனான கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் 4 இடத்தில் சென்னைக்கான வாய்ப்பு உறுதிசெய்யப்படும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதனிடையே சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி லீக் போட்டி நடைபெற்றதையடுத்து ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி சென்னை அணி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது.
அப்போது மைதானத்தை சுற்றி சென்னை அணி வீரர்கள் வலம்வந்து ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். ஜடேஜா, ரஹானே, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, பிராவோ, நிர்வாக சிஇஓ காசி விஸ்வநாதன் என அணியை சேர்ந்தவர்கள் ”அனைவருக்கும் நன்றி” என தமிழில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது அங்கு வர்ணனையாளராக இருந்த முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தோனியிடம் ஓடிச்சென்று தன்னுடைய ஆடியில் ஆட்டோகிராப் போடுமாறு அவரிடம் கேட்டநிலையில், சுனில் கவாஸ்கரின் உடையில் தோனி ஆட்டோகிராப் இட்டார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்த சம்பவம் குறித்து கவாஸ்கர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதில், “CSK மற்றும் தோனி ஆகியோர் ரசிகர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கப்போகிறார்கள் என கேள்விப்பட்டவுடன், நானும் ஒரு மறக்க முடியாத தருணத்தை ஏற்படுத்த விரும்பினேன். அதனால்தான் ஆட்டோகிராஃப் வாங்க தோனி இருக்கும் இடத்தை நோக்கி ஓடினேன்.
அதுதான் சேப்பாக்கத்தில் அவரின் கடைசிப் போட்டியாக இருக்கும். நிச்சயமாக CSK பிளே ஆஃப் தகுதிப்பெறும்பட்சத்தில் மீண்டும் அவர் வருவார். ஆனால் அத்தருணத்தை நான் மிஸ் செய்ய விரும்பவில்லை. அங்கிருந்த ஒளிப்பதிவாளர் ஒருவரிடம் மார்க்கர் பென் இருந்தது. அதை வாங்கிக்கொண்டு தோனியிடம் சென்று நான் அணிந்திருக்கும் சட்டையில் ஆட்டோகிராஃப் போட சொன்னேன். இந்திய கிரிக்கெட்டுக்காக பல சாதனைகளை செய்த ஒருவரிடம் இருந்து பெறுவது மிகவும் உணர்ச்சிகரமானது" என்று கூறியுள்ளார்.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments