இந்த வலியை உடனடியாக சரியாக்க ஏதேனும் மருந்துகள் எடுக்கலாமா? அடிக்கடி இன்ஃபெக்ஷன் வந்தால் கிட்னி பாதிக்கப்படுமா?
வெறும் அறிகுறிகளை மட்டும் வைத்து யூரினரி இன்ஃபெக்ஷனை உறுதிசெய்ய முடியாது.
அதற்கான பிரத்யேக பரிசோதனைகளான சிறுநீர் பரிசோதனை, கல்ச்சர் டெஸ்ட் போன்றவற்றைச் செய்து பார்த்தால் தான் தெரியும்.
அடிக்கடி நீங்கள் உணரும் எரிச்சல் இன்ஃபெக்ஷனாலும் இருக்கலாம். வேறு காரணங்களாலும் இருக்கலாம். தாங்கமுடியாத வலி ஏற்படும் போது, அவசரத்துக்கு வேண்டுமானால் பொட்டாசியம் சிட்ரேட் என்ற சிரப்பை குடிக்கலாம்.
அதுவும் அதிகபட்சமாக ஒருவேளை அல்லது இரண்டு வேளைகளைத் தாண்டக்கூடாது.
அடுத்தபடியாக மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையை நாடுவது தான் சரியானது.
உங்களுடைய பிரச்னை இன்ஃபெக்ஷனால் ஏற்பட்டதா, எந்த வகையான இன்ஃபெக்ஷன் என்பதை எல்லாம் டெஸ்ட்டில் பார்த்து அதற்கேற்ப மருத்துவர் சிகிச்சை அளிப்பார்.
சிறுநீரகங்களில் கல் இருந்தாலோ, புண் இருந்தாலோ அதற்கு வேறு சிகிச்சை அளிப்பார். அடிக்கடி வரும் சிறுநீரகத் தொற்று காரணமாக கிட்னி பாதிக்குமா என்றால் அது உங்கள் பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்தது.
சர்க்கரை நோயாளிக்கு கிட்னி பாதிக்குமா?
நீண்ட காலமாக இன்ஃபெக்ஷன் இருக்கிறது என்றால் அதன் காரணமறிந்து சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, கல் இருந்தால் அதனால் ஏற்படும் இன்ஃபெக்ஷன் அறிகுறி வெளியே தெரியும்.
ஆனால் உள்ளே கிட்னி பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை ஸ்கேன் மூலம் உறுதிசெய்து, கற்களை அகற்ற சிகிச்சை எடுக்க வேண்டியது மிக மிக அவசியம். ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் சர்க்கரை நோயாளியாக இருந்து, சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி இருந்தால், அதன் காரணமாகவும் கிட்னி பாதிக்கப்படும்.
அதற்கு சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் விஷயத்தில் தொற்றுக்கான காரணம் அறிந்து எடுக்கப்படும் சிகிச்சை தான் பலன் தரும். தற்காலிக நிவாரணங்கள் நிரந்தமானவை அல்ல. என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments