அந்நியத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைத் தடுக்க அரசாங்கம் பல அடுக்கு லெவி முறையை அறிமுகப்படுத்தும்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
அந்நியப் பணியாளர்களுக்கு விண்ணப்பிக்கும் வர்த்தகர்களுக்கு மீது பல அடுக்கு லெவி விதிப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த வரியின் மூலம் கிடைக்கும் வருமானம் சிறிய, நடுத்தர உள்ளூர் தொழிலாளர்களின் உயர்வுக்கு பயன்படுத்தப்படும்.
தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான அந்நிய தொழிலாளர்கள் தேவைப்படும் வணிகங்களுக்கு குறைந்த லெவி விதிப்பதும்,
மேலும் தேவைப்படுபவர்களுக்கு அதிக வரி விதிப்பதும் ஒரு வழிமுறையாக இருக்கலாம்.
மேலும் இப்புதிய நடைமுறை இறுதி செய்யப்பட்டதுடன், அது அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று ஸ்டீவன் சிம் மேலும் கூறினார்.
ஆள்பலத்தில் அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 2.5 மில்லியனாக அல்லது 15 சதவீதமாகக் கட்டுப்படுத்துவதை நாடு இலக்காக கொண்டுள்ளது.
இதன் அடிப்படையில் அந்நிய தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதே இந்த முயற்சியாகும்.
தற்போது நாட்டில் சுமார் 2.2 மில்லியன் அந்நியத் தொழிலாளர்கள் உள்ளனர்.
இதனால் புதிய அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீடுகளுக்கான ஒப்புதல்கள் முடக்கப்பட்டுள்ளன என்று ஸ்டீவன் சிம் கூறினார்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments