தனது மனைவியின் உடலை 200க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி, பின்னர் தனது நண்பருக்கு £50 (RM300) கொடுத்து அவரது உடலை கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஆற்றில் வீசிய கணவருக்கு குறைந்தபட்சம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
28 வயதான நிக்கோலஸ் மெட்சன், 26 வயதான ஹோலி பிராம்லியை மார்ச் 2023 இல் நான்கு முறை கத்தியால் குத்தினார்.
".ஆற்றில் மனிதக் கை மிதக்கும்போது , ஆரம்பத்தில் அவை விலங்குகளுக்கு சொந்தமானவை என்று கருதிய ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
பிராம்லியின் எச்சங்கள், அவரது இதயத்தின் சில பகுதிகள், மீட்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
ஆரம்பத்தில் கொலையை மறுத்த மெட்சன்பிறகு குற்றத்தை ஒப்புக்கொன்றார்.,
திங்களன்று, அவருக்கு குறைந்தபட்சம் 19 ஆண்டுகள் மற்றும் 316 நாட்கள் சிறைத்தண்டனையுடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
நீதிபதி ஹிர்ஸ்ட், இந்த வழக்கு "ஆழ்ந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது" என்று தெரிவித்துள்ளார்.
பிளாட்டில் "ப்ளீச் மற்றும் அம்மோனியாவின் கடுமையான வாசனை" இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர், ஒரு டவலில் ஒரு ரம்பம், அவர்களின் குளியலறையில் இரத்தக்கறை படிந்த தாள்கள் மற்றும் அவர்களின் படுக்கையறை தரையில் ஒரு பெரிய இரத்தக்கறை ஆகியவற்றைக் கண்டனர்.
அவரது மனைவி காணாமல் போனது குறித்து மெட்சன் அவர்களிடம் கூறியது பொய் என்பதை கண்டுபிடித்த பிறகு, அவர் கைது செய்யப்பட்ட்டார்.
அவரது கைப்பேசியை தேடியதில், “இறந்த உடலை எப்படி அகற்றுவது?”, “எனது மனைவி இறந்தால் நான் என்ன பலன்களைப் பெற முடியும்?” உள்ளிட்ட கூகுள் தேடல்களை மெட்சன் செய்திருப்பது தெரியவந்தது.
அவரது மனைவி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சில நாட்களில், மெட்சன் தனது பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி தனது நண்பர்களுக்கு செய்தி அனுப்பினார் மற்றும் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக நினைத்து அவர்களை ஏமாற்றினார்.
அவளது வங்கிக் கணக்கிலிருந்து பணம் அனுப்பும் போது அவள் அவனை விட்டுவிட்டு மான்செஸ்டருக்குச் சென்றுவிட்டாள் என்று அவர்களை நம்ப வைக்க முயன்றார்.
விரிவான சிசிடிவி தேடல்களில், மார்ச் 25 அதிகாலையில் மெட்சன் 14 வது மாடியில் உள்ள தனது பிளாட்டில் இருந்து ஒரு லிப்டில் பெரிய அளவிலான பைகளை நகர்த்தியது தெரியவந்தது.
வாடிங்டனில் உள்ள வால்நட் க்ளோஸில் உள்ள தனது நண்பர் ஹான்காக்கிற்கு மார்ச் 25 அதிகாலையில் குறிப்பிட்ட வேலையை முடித்தால் பணம் தருவதாக ஒரு செய்தியை அனுப்பியுள்ளது விசாரனையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ஹான்காக் ஏப்ரல் 5 அன்று கைது செய்யப்பட்டார்.
அதே போல் குழந்தைகளுடன் பாலியல் தொடர்பு, மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குற்றச் செயலுக்கு ஹான்காக் துணை நின்றதால் மூன்று ஆண்டுகளும், மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments