Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -171


ஒருநாள் சூரியன் மறைந்து, புரோகோனிஷ் கிராமத்தை  இருள் ஆட்கொண்டபோது, ரெங்க்மா கதறலானாள்!  திக்கு முக்காடி விட்ட செரோக்கி, தாய் ஜாகை நோக்கி ஓடினான்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தன்முன் வந்து நின்ற மகனைக் கண்டதும் தாய் பதறிப்போய்விட்டாள்.

"என்னடா... என்ன நடந்திச்சி?"

 

செரோக்கி பேச முயன்றான்! அது அவனால் முடியாது போய்விட்டது; அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வரமறுத்தன.

தாயாரின் கைகளைப் பிடித்தவன்,   தரதரவென்று அவளை இழுத்து வந்து தன் மனைக்குள் நுழைந்தான்.

ஜமுக்காளத்தில்  சாய்ந்தபடி  ரெங்க்மா கதறிக் கொண்டிருந்தாள்.

நிலைமையைப் புரிந்துகொண்ட தாய், மருத்துவச்சியைக் கூட்டி வரும்படி செரோக்கியிடம்  கூற,அவன் இருளைக் கிழித்தவனாக அலவத்தை நோக்கி ஓடலானான்.

அவனது ஓட்டம் தனது மாமியில் ஜாகையில் நின்றது! ரெங்க்மாவின் தாய் தந்தையரிடம் விடயத்தைக் கூறியதும், தீப்பந்தத்தை மூட்டிக்கொண்ட தந்தையும் செரோக்கியைப் பின்தொடர்ந்து ஓடலானார்.

ரெங்க்மாவின் கதறல்  அக்கம் பக்கத்தினரை அவளது மனை நோக்கி விரைந்துவர வைத்துவிட்டது. 

குகைக்குள்ளிருந்துந்து வந்த யோகியார், மனைக்கு வெளியில் நின்று கைகள் இரண்டையும் மேலுயர்த்தி, பிரார்த்தனை புரியலானார்.

எனையோர் மனைக்குள்  நுழைந்து, ரெங்மாவைச் சூழ்ந்து கொண்டனர். கதறிக் கொண்டிருந்த அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளை  அள்ளி வீசிக்கொண்டிருந்தனர்.

ரெங்க்மாவின் தந்தை தீப்பந்தத்துடன் முன்னாள் வர, மருத்துவச்சியுடன் இணைந்து செரோக்கி அவரைத் தொடர்ந்து வந்தான்.

மனைக்குள் நுழைந்த மருத்துவச்சி,  கூடி நின்றிருந்தவர்களில் வயதில் முதிர்ந்த இருவரை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு, மற்றவர்களை வெளியில்  துரத்தி விட்டு கதவைச் சாத்தியதும், சில நொடிகள் மட்டுமே ரெங்க்மாவில் அலறல் கேட்டது! அதன் பிறகு குழந்தையின் அழுகுரல் மட்டும்தான் கேட்டது.

சிறிதுநேர இடைவெளிக்குப் பின்னர் கதவு திறந்துபட்டதும், செரோக்கி மனைக்குள் நுழைந்து செக்கோவின் இன்முகம் கண்டான்.

(தொடரும்)


 



Post a Comment

0 Comments