
படம்: AP/Andy Wong)
திரு சின் காங் (Qin Gang) நேற்று (25 ஜூலை) சீனாவின் வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

57 வயதாகும் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்குக் காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
திரு சின் காங் 7 மாதங்களாக வெளியுறவு அமைச்சராகச் சேவையாற்றிவந்தார்.
கடந்த ஒரு மாதமாக அவர் வெளியிடங்களில் தென்படவில்லை.
அவருக்குப் பதிலாகத் திரு. வாங் யீ (Wang Yi) புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சின் காங் - சில தகவல்கள்...
➢1966ஆம் ஆண்டில் சீனாவின் தியான்ஜின் (Tianjin) நகரில் பிறந்தவர்.
➢University of International Relations பல்கலைக்கழகத்தில் அனைத்துலக அரசியல் படிப்பில் பட்டம் பெற்றவர்.
➢திருமணமாகி அவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
➢1988ஆம் ஆண்டில் அரசதந்திரச் சேவைப் பிரிவில் பணிபுரியத் தொடங்கினார்.
➢கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
➢அதற்கு முன்னர் சுமார் ஈராண்டுகள் அமெரிக்காவுக்கான சீனத் தூதராக இருந்தவர்.
➢சீன அதிபர் சி சின்பிங்குடன் நெருங்கிப் பழகியதால் அவர் வெகு விரைவில் பதவியில் உயர்வு கண்டதாக கவனிப்பாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.
➢இறுதியாகத் திரு சின் காங் ஜூன் 25ஆம் தேதி வெளியிடத்தில் காணப்பட்டார். அவர் இலங்கை, வியட்நாம், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை பெய்ச்சிங்கில் சந்தித்திருந்தார்.
➢இம்மாதத்தின் முற்பாதியில் நடந்த அரசதந்திர கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அமைச்சு கூறியது.
➢அரசாங்க இணையத்தளங்கள் அனைத்திலிருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
➢பிரபல தொலைக்காட்சிப் படைப்பாளருடன் இருந்த கள்ள உறவு காரணமாக அவர் சிக்கிக் கொண்டதாய் ஊகங்கள் நிலவுகின்றன.
mediacorp
ஆதாரம் : AGENCIES
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments