Ticker

6/recent/ticker-posts

1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலையில் பூமி - ஆய்வில் பகீர்

1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமி தற்போது வெப்பநிலையில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மனித செயல்பாடுகள் காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. 

 


இருப்பினும், இதில் எதிர்பார்தத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் 1.20 லட்சம் ஆண்டுகள் இல்லாத அளவுக்குதற்போது பூமியின் வெப்பநிலை அதிகரித்திருப்பதாக  ஐ.நா. நிறுவனமான உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பணிக்கட்டிகள், மரங்களின் வயது, பல ஆயிரம் ஆண்டுகளாக புவியின் வெப்ப நிலை உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதிகபட்சமாக சீனாவில் ஒருமுறை 52.2 டிகிரி செல்சியஸ் அதாவது 126 ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. 

கனடாவில் காட்டுத் தீ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் காணப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்போது பனிப்பாறைகள் மேலும் உருகி கடல்நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் மூழ்கக் கூடும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பிடும் வகையில் கடல் நீரின் வெப்பநிலையும் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் மிகவும் குளிர் நிலவக்கூடிய அண்டார்டிகா பகுதியிலும் வெப்பக் காற்றை உணர முடிவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேநேரம் தென்கொரியா, ஜப்பான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கடந்த ஓராண்டில் மட்டும் மிக அதிகமான மழை பெய்திருக்கிறது.

news18


 



Post a Comment

0 Comments