Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலுக்குள் பிளவு.பல அமைப்புக்கள் முஸ்லிம் கவுன்சிலில் இருந்து வெளியேற்றம்.காரணம் என்ன?


பல இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து உருவானதே ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் என்ற அமைப்பாகும். இதன் தலைவராக N.  M. அமீன் அவர்களும்  பிரதித் தலைவராக ஹில்மி அஹமட் அவர்களும் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தனர். 
அண்மையில் (MMDA) முஸ்லிம் விவாக , விவாகரத்து தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலில் அங்கம் வகித்த பல அமைப்புக்கள் இக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ளன. 

இதில் இலங்கை சரீஆ கவுன்சில் இதில் இருந்து வெளியேறியமை  குறிப்பிடத்தக்க  முக்கிய அம்சமாகும்.

முஸ்லிம் விவாக விவாகரத்து (MMDA) திருத்த சட்டமூலத்தில் ஏற்கனவே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்ட திருத்தத்தில் பெண் காதிகளை நியமித்தல்,
திருமண ஒப்பந்தத்தின் போது மணமகள் சார்பாக வலி இல்லாமல் செய்தல் போன்ற விவகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இதற்கு  எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் கவுன்சிலில் அங்கம் வகித்த  ஏனைய அமைப்புகள் நீதி அமைச்சரை சந்தித்து தமது ஆட்சோபனைகளை முன் வைத்தனர். 

இதனை ஏற்றுக் கொண்ட நீதி அமைச்சர் முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதமாக ஒரு திருத்தத்தை செய்து தரும்படி வேண்டிக்கொண்டார்.

இதன் பிரகாரம் பெண் காதிகளை நியமித்தல் தடுக்கப்பட வேண்டும்,  மணப்பெண் வழியாக வலி என்ற விடயம் உள்ளடக்கப்பட வேண்டும்   போன்றவற்றில் திருத்தங்களை மேற்கொண்டு  மீண்டும் ஒரு திருத்தச் சட்டமூலத்தை  அகில இலங்கை ஜமியத்துல் உலமா உட்பட
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலில் அங்கம் வகித்த ஏனைய அமைப்புகளும் ஒன்றிணைந்து நீதி அமைச்சரிடம் கையளித்து உள்ளது.

இவற்றில் ஏற்பட்ட கருத்து மோதலின் போது தம் அமைப்புக்கள். இணக்கப்படாத விடயங்களுக்கு தமது அமைப்புகளின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் , கையொப்பங்களிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இதனை அடுத்து இலங்கை முஸ்லிம் கவுன்சிலில் இருந்து அதில் அங்கம் வகித்த ஏனைய அமைப்புகள் வெளியேறி உள்ளன.

இதுவரை சுமார் முப்பது வருடங்களாக பல அமைச்சர்களின் கீழ் திருத்த முற்பட்டு, திருத்த முடியாமல் போன முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திருத்தம் இறுதிக் கட்டத்தை அடையும் நிலைக்கு வந்துள்ளது.

பேருவளை ஹில்மி 


 



Post a Comment

0 Comments