Ticker

6/recent/ticker-posts

பெண் உளவாளியிடம் ஏமாந்த இந்திய விஞ்ஞானி - ரகசிய தகவல் கசிந்ததாக பகீர் தகவல்!

பாகிஸ்தான் பெண் உளவாளிகளுக்கு ஏவுகணை ரகசியங்களை இந்திய விஞ்ஞானி வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்திய விஞ்ஞானி 
மகாராஷ்டிரா, புனேவில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு ஆராய்ச்சி மையம் (டிஆர்டிஓ) செயல்படுகிறது. அதன் இயக்குநராக பிரதீப் குருல்கர் (60) பணியாற்றி வந்தார். 
அக்னி ஏவுகணை, சக்தி ஏவுகணை, நிர்பய் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணை திட்டங்களில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி உள்ளார். இந்நிலையில், 2022ல் சமூக வலைதளத்தில் தாரா தாஸ் குப்தா என்ற பெண்ணுடன் பிரதீப் குருல்கருக்கு தொடர்பு ஏற்பட்டது.

கசிந்த தகவல்
லண்டனில் வசிப்பதாக கூறிய அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். மேலும், தனது ஆபாச படங்கள், வீடியோக்களை அந்தப் பெண் பகிர்ந்துள்ளார். இருவரின் சமூக வலைதள உரையாடல்களின்போது இந்தியாவின் ஏவுகணை திட்டங்கள்,

ரஃபேல் போர் விமானங்கள் குறித்த ரகசியங்களை பிரதீப் குருல்கரிடம் இருந்து அந்த பெண் பெற்றிருக்கிறார். தொடர்ந்து, ஜூஹி அரோரா என்ற பெயருடைய பெண்னுடனும் பழக்கம் ஏற்பட்டு ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.

இதில், சமூகவலைதளங்களில் தன்னோடு உறவாடியாது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பெண் உளவாளிகள் என்பது குருல்கருக்கு தெரியவந்தது. உடனே, அவர் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீஸார் அண்மையில் 1,837 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். 

ibctamilnadu


 



Post a Comment

0 Comments