Ticker

6/recent/ticker-posts

மலேசியாவில் போதைப்பொருள் உட்கொண்ட குழந்தை - தாயார் கைது


(கோப்புப் படம்: Ignacio Campo/Unsplash)

 
மலேசியாவின் தைப்பிங் (Taiping) நகரில் ஒரு பெண் குழந்தை போதைப்பொருள் உட்கொண்டது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

குழந்தையின் வயது 1 வருடம் 10 மாதங்கள் என்று The Star நாளேடு தெரிவித்தது.

குழந்தை, கட்டுப்படுத்த முடியாமல் அசைவதையும் விடாமல் அழுவதையும் கண்ட 22 வயதுத் தாயார் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தார்.

முன்னதாக, தாம் கடைக்குச் சென்றபோது அவர் குழந்தையைத் தமது தாயின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மருத்துவப் பரிசோதனையின்போது, குழந்தை methamphetamine, amphetamine போதைப்பொருள்களை உட்கொண்டது உறுதிசெய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து குழந்தையின் தாயார் கைது செய்யப்பட்டார்.

மருத்துவப் பரிசோதனையில் அவர் methamphetamine போதைப்பொருளை உட்கொண்டது உறுதிசெய்யப்பட்டதாக The Star தெரிவித்தது.

mediacorp


 



Post a Comment

0 Comments