Ticker

6/recent/ticker-posts

கிரிக்கெட், விளம்பரம்.. கொட்டும் வருமானம்.. பணக்கார கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

 
உலகம் முழுவதும் ரசிகர்கள் பெற்று இருக்கும் விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான். கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு என்று தனிரசிகர் கூட்டத்தையே பெற்றுள்ளனர். 

அதே நேரத்தில் கோடிக்கணக்கில் பணம் பரிவர்த்தனையாகும் விளையாட்டாகவும் கிரிக்கெட் இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிலர் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஆயிரம் கோடிகள் வரை சொத்து சேர்த்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களாக இருந்த தோனியும், விராட் கோலியும் உலகின் தலை சிறந்த வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. கோலி இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் இப்போதும் விளையாடி வரும் நிலையில், தோனி சர்வதேச சபோட்டிகளில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு விலகிவிட்டார். ஆனால் தோனி, கோலி இருவருமே ஐபிஎல் போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரர்களாக உள்ளனர்.

இப்போது தோனி ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். கோலி பெங்களூரு ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். தோனி மற்றும் கோலி இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இருவருமே இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான தகவலின் படி, தோனியின் சொத்து மதிப்பை விட விராட் கோலியின் சொத்து மதிப்பு கொஞ்சம் அதிகம் எனத் தெரியவந்துள்ளது. அந்த தகவலின் படி கோலியின் சொத்து மதிப்பு ரூ.1,050 கோடி. தோனியின் சொத்து மதிப்பு ரூ.1,040 கோடி. இன்ஸ்டாகிராமில் இரண்டரை கோடி ஃபாலோயர்களுடன் கோலி இந்தியாவின் செலிபெரட்டி கிரிக்கெட்டராக இருக்கிறார். 34 வயதாகும் கோலி இந்திய அணியுடன் செய்துள்ள ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு 7கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். அதோடு ஒவ்வொரு டெஸ் போட்டிக்கும் ரூ.15 லட்சம் போட்டி சம்பளமாக பெறுகிறார்.

ஒரு நாள் போட்டிக்கான இவரின் சம்பளம் ரூ.6 லட்சம். டி-20 போட்டிக்கான சம்பளம் 3 லட்சம் ரூபாய். அதோடு ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக இவர் பெறும் வருமானம் ரூ.15 கோடி. சிஎஸ்கே அணிக்காக விளையாடும் தோனிக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் 12 கோடி ரூபாய் ஆகும். பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாலும், வேறு சில தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதாலும் தோனியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டகாரர், இன்றும் யாராலும் மறக்க முடியாத கிரக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் 1,250 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறார்.

news18


 



Post a Comment

0 Comments