தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் குகை ஆய்வாளர்கள் ஒரு மடுவின் அடிப்பகுதியில் மறைந்து, செழித்து, வளர்ந்து வரும் 130 மீட்டர் உயரமுள்ள மரங்களைக் கொண்ட காடுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
630 அடி ஆழம் மற்றும் 176 மில்லியன் கன அடிக்கு மேல் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் காடு சிங்க் ஹோல் எனப்படும் பாரிய மூழ்கிய குழியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அறிவியலால் அறிவிக்கப்படாத தனித்துவமான உயிரினங்களின் தாயகமாக காடு இருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர். சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மூழ்கிய குழி அல்ல இது. இதுவரை சுமார் 30 சிங்க் ஹோல்கள் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கண்டறிந்ததில் தெற்கு சீனாவில் உள்ள இந்த குவாங்சி தளம் மிகப்பெரியது
இந்த குழியின் உள்ளே மூன்று குகைகளையும் நன்கு பாதுகாக்கப்பட்ட பழமையான காடுகளையும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது."இந்த குகைகளில் இதுவரை அறிவியலால் அறிவிக்கப்படாத அல்லது விவரிக்கப்படாத இனங்கள் உள்ளன " என்று பயணக் குழுவை வழிநடத்திய சென் லிக்சின் கூறினார்.
இப்பகுதியில் உள்ள சிங்க்ஹோல்கள் கார்ஸ்ட் நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும் மற்றும் நிலத்தடி நீர் பாறைகளை கரைக்கும் போது இப்படியான குழிகள் உருவாகிறது. இதனால் குகை அறையின் மேற்புறம் இடிந்து விழுகிறது. இந்த மூழ்கும் குழிகளை உள்ளூர்வாசிகள் 'டியான்கெங்' அல்லது 'ஹெவன்லி பிட்' என்று அழைக்கின்றனர்.
கடந்த ஆண்டு மே மாதம், விஞ்ஞானிகள் அடங்கிய குகை ஆய்வுக் குழு, சீன 'ஜியோபார்க்கில்' நிலத்தடி மர்மத்தை கண்டுபிடித்தது.
குவாங்சி டெய்லி செய்தித்தாளின் அறிக்கையின்படி, மூழ்கும் குழி ஆபத்தானது, விசித்திரமானது, செங்குத்தானது அதே சமயம் அழகானது.
அதோடு இது யுனெஸ்கோ நிறுவனத்தின் ஜ்யோபார்க் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜியோபார்க்கின் பாதுகாப்பு நோக்கத்தை மறுசீரமைத்தல், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு தளங்களை நிறுவுதல் மற்றும் உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு அறிவியல் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆசிய குகைகள் கூட்டணியின் தலைவர் ஜாங் யுவான்ஹாய் கூறினார்.
3000 மீ தடிமன் கொண்ட டெவோனியன் முதல் பெர்மியன் கார்பனேட் பாறைகளின் 60% க்கும் அதிகமான வண்டல் படிவு இந்த சிங்க் குழிக்குள் என விவரிக்கப்பட்டுள்ளது. அதோடு குழிக்குள் குறைந்த வெளிச்சமே இருக்கும் என்பதை அதை வைத்து காடு வளர்ந்துள்ளது. மேலும் இந்த மரங்கள் ஒளியைத் தேடி மேல்நோக்கி வளர்ந்ததால் இங்குள்ள மரங்கள் எல்லாம் அதிக உயரம் கொண்டுள்ளது. ஆனால் மெலிதாக காணப்படுகிறது.
Source:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments