Ticker

6/recent/ticker-posts

உலகிலேயே முதன் முறையாக நாய் – நரி கலப்பினம்; எப்படி இப்படி?


உலகிலேயே முதன் முறையாக நாய் – நரி கலப்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

நாய் – நரி 

பிரேசிலின் ரியோ கிராண்டே பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நரி போன்ற தோற்றம் கொண்ட உயிரினம் மீட்கப்பட்டது. அது காயம் அடைந்திருந்த நிலையில், உயிரியல் வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

மேலும், அது நாய் போன்ற கண்ணும் அல்லது காதுகள் நீண்டு நரி போன்ற தோற்றம் கொண்டிருந்ததால் நாய் வழக்கமாக உண்ணும் உணவு பொருட்களை அதற்கு கொடுத்துள்ளனர். ஆனால், அந்த உயிரினம் குட்டி எலிகளை சாப்பிட்டு வந்துள்ளது.

கலப்பு உயிரினம்

இந்நிலையில் இந்த உயிரினம் நாய் – நரி இணைந்த கலப்பினம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கலப்பு உயிரினம் நாய் போன்று சாதுவாக காணப்படவில்லை. காட்டு விலங்குகளுக்கு இருக்கும் ஆபத்தான குணங்கள் இருந்தன.

பெண் கலப்பினமான இது மனிதர்களிடம் நெருங்கி பழகாது. காயம் அடைந்திருந்ததால் இந்த கலப்பினத்திற்கு நீண்ட நாட்கள் சிகிச்சை தேவைப்பட்டது. அதன்பின்னர் பூரண குணம் அடைந்தது. நாய் – நரி கலப்பினத்திற்கு டாக்ஸிம் (Doxim) என்று பெயர் வைத்திருந்தோம்.

அதனை நன்றாக பராமரித்த பின்னர் உடல் நிலை தேறியதும் அதனை சான்டா மரியா நகரில் உள்ள உயிரியல் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தோம். இருப்பினும் இந்த டாக்ஸிம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இறந்து விட்டது. இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என உயிரியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.  

Source:ibctamilnadu


 



Post a Comment

0 Comments