Ticker

6/recent/ticker-posts

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கலவரம் - இணையச் சேவைகள் தடை


(கோப்புப் படம்: AP)

 
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் நூஹ் வட்டாரத்தில் கலவரங்களையொட்டி இணையச் சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

அங்கு வன்முறை மோசமாகியிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

குறைந்தது 2 பேர் மாண்டனர். 50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

சமய ஊர்வலம் ஒன்றில் கற்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து பதற்ற நிலை மோசமானதாய் உள்ளூர் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

வாகனங்களுக்குத் தீவைக்கும் காணொளிகள் இணையத்தில் பகிரப்படுகின்றன.

நிலவரத்தைக் கட்டுப்படுத்த கூடுதல் படைகளைப் பணியமர்த்தும்படி உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆலயம் ஒன்றில் சுமார் 4,000 பேர்வரை பிணைபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

அவர்களில் பாதிக்கும் அதிகமானோரை மீட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆதாரம் : AGENCIES

mediacorp


 



Post a Comment

0 Comments