Ticker

6/recent/ticker-posts

விண்வெளியில் உயிர் பிரிந்தால் என்ன நடக்கும் தெரியுமா? - நாசா விளக்கம்!

ஒருவர் விண்வெளி பயணத்தின்போது உயிர் பிரிந்தால் என்ன நடக்கும் என்பதனு குறித்து நாசா விளக்கம் அளித்துள்ளது.


ஆராய்ச்சி நிறுவனம்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆய்வு செய்வது 60 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அதில் தற்பொழுது வரை மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

1986, 2003-ம் ஆண்டுகளில் நாசா விண்வெளி விண்கலத்தில் 14 பேர், 1971-ம் ஆண்டு சோயுஸ் 11 பயணத்தின் போது 3 விண்வெளி வீரர்கள் மற்றும் 1967-ல் அப்பல்லோ 1 ஏவுதளத்தின் தீயில் 3 விண்வெளி வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

தற்பொழுது 2025-ம் ஆண்டில் நாசா ஒரு குழுவினை நிலாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. பின்னர், அடுத்த 10 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு குழுவை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

நாசா விளக்கம்

இந்நிலையில், விண்வெளிகளில் இரந்துண்விட்டால் என்ன செய்வார்கள் என்ற கேள்வி பலர் மனதில் எழுந்தது. அதற்கு தற்பொழுது நாசா விளக்கமளித்துள்ளது. அதில், சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற குறைந்த சுற்றுவட்டாரத்தில் யாராவது இறந்துவிட்டால் சில மணி நேரங்களில் உடலை கொண்டு வந்துவிடுவர்.

நிலாவில் இறந்துவிட்டால் சில நாட்களில் திரும்பிவிடலாம். ஆனால் செவ்வாய் கிரகத்தின் பயணத்தின்போது இறந்துவிட்டால், பூமிக்கு சென்றுவிட்டு திரும்ப செல்லமுடியாது, அதனால் அந்த பயணம் முடிவடையும் பொழுது தான் உடலை கொண்டுவர முடியும்.

ஆனால் அதற்கு 2 வருடங்கள் கூட ஆகலாம், அதுவரை உடலை தனி அறையில், அல்லது சிறப்பு உடல் பையில் வைத்து பாதுகாப்பார்கள் என்று கூறியுள்ளனர்.

SOURCE:ibctamil


 



Post a Comment

0 Comments