மனிதன் அல்லாத ஆனால் மனிதனைப் போன்ற 2 சடலங்களை மெக்சிகோ அரசு காட்சிப்படுத்தியுள்ளது.
இவை சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன.
இந்த சடலங்கள் வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸின் சடலங்களாக இருக்கும் என்று தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் இந்த சடலங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 3 கை விரல்கள் மட்டுமே காணப்படுகின்றன. பார்ப்பதற்கு மனிதனை ஒத்த சாயலில் ஆனால் வேற்றுகிரகவாசிகள் உருவத்தில் இவை உள்ளன.
பெரு நாட்டில் கியூஸ்கோ பகுதியில் செயல்படும் சுரங்கம் ஒன்றில் இருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஏலியன்ஸ் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நடத்தி வரும் ஜேமி மவசான் இது ஆராய்ச்சியின் முக்கிய திருப்பம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பற்கள் இல்லாமல் 3 கைவிரல்கள் கொண்ட இவை ஏலியன்ஸ் என்று கூறியுள்ள அவர், பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல என்று கூறியுள்ளார்.
Source:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments