
PUBG ஆன்லைன் மொபைல் கேம் விளையாடும் போது துளித்த காதலால், உத்திர பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனாவுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர் தான் தற்போது பேசு பொருளாக உள்ளார்.

'எல்லை தாண்டிய காதல் வழக்கு' என்று அழைக்கப்படுவது தொடர்பாக, முதல் முறையாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய முதல்வர் யோகி, சீமா ஹைதர் வழக்கு தொடர்பான ஊகங்களுக்கு பதிலளித்த முதல்வர் யோகி, “இது நாடுகளுடன் தொடர்புடைய விஷயம். இது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்” என்றார்.
சீமா ஹைதர் - சச்சின் மீனா காதல் கதை
நேபாளத்தில் தான் திருமணம் செய்து கொண்ட தனது இந்திய துணையை 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் மொபைல் கேம் PUBG விளையாடும் போது காதல் துளித்ததாக சீமா ஹைதர் கூறுகிறார். PUBG மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்களின் மூலம் அவர்களுக்கிடையேயான நட்பு எல்லைகளை கடக்கும் அளவிற்கு காதலாக மலர்ந்தது. காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் சச்சின் மீனாவுடன் ஒரு வாரம் கழிக்க தனது நான்கு குழந்தைகளுடன் இந்த ஆண்டு மார்ச் மாதம் நேபாளத்திற்குச் சென்றார்.
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த சீமா ஹைதர்
பின்னர், இந்த ஆண்டு மே மாதம், அவர் கராச்சியில் இருந்து துபாய் மற்றும் நேபாளத்திற்குச் சென்று சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார். சீமா ஹைதர் மற்றும் சச்சின் மீனா ஜூலை 4 அன்று இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியதற்காக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர் மற்றும் மூன்று நாட்களுக்குப் பிறகு உள்ளூர் நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போதிருந்து, பாகிஸ்தானில் இருந்து வந்த இவர் ஊடகத் தலைப்புச் செய்திகளைப் பிடித்து வருகிறார், மேலும் 'பாகிஸ்தானின் உளவாளி' என்ற கூற்றுக்களை நிராகரித்து தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு ஏராளமான பேட்டிகளை அளித்துள்ளார்.
பாகிஸ்தானுக்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை: சீமா ஹைதர்
ஜீ மீடியாவிடம் பிரத்தியேகமாக பேசிய சீமா ஹைதர், தான் ஒரு சாதாரண பெண் என்றும் பயங்கரவாதி அல்ல என்றும், இந்தியாவில் என்றென்றும் வாழ விரும்புவதாகவும் கூறினார். இவை அனைத்திற்கும் மத்தியில், மார்ச் மாதம் இருவரும் தங்கியிருந்த நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள ஒரு ஹோட்டலின் உரிமையாளர், இந்த காதல் ஜோடி போலி பெயர்களில் ஒரு அறையை பதிவு செய்ததாகக் கூறினார். சீமா ஹைதரைச் சுற்றியுள்ள மர்மம், அவரது 'மர்மமான' பயணம் குறித்து உத்திர பிரதேச பயங்கரவாத தடுப்பு அமைப்பு மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளால் வெளியிடப்பட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு
சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து நொய்டாவைச் சேர்ந்த இந்திய கூட்டாளி சச்சின் மீனாவுடன் தங்கியதற்காக விசாரணைக்கு உட்பட்ட சீமா ஹைதர், இந்திய குடியுரிமை கோரி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு தாக்கல் செய்தார். ஊடக அறிக்கைகளின்படி, குடியரசுத்தலைவர் முர்முவிடம் தனது கருணை மனுவில், இந்திய குடிமகன் சச்சின் மீனாவை திருமணம் செய்து கொண்டதன் அடிப்படையில் தனக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று சீமா ஹைதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
SOURCE:zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments