Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் புள்ளிகளே இல்லாத அரிய ஒட்டகச்சிவிங்கி


(படம்: Tony Bright/Brights Zoo via AP)

 
அமெரிக்காவின் டென்னஸி மாநிலத்தில் புள்ளிகளே இல்லாத அரிய ஒட்டகச்சிவிங்கி பிறந்துள்ளது.

சென்ற மாதம் 31ஆம் தேதி Bright விலங்குத் தோட்டத்தில் பிறந்த அது தற்போது 6 அடி உயரம்.

அந்தப் பெண் ஒட்டகச்சிவிங்கியின் உடல் பழுப்பு நிறத்தில் உள்ளது.

1972ஆம் ஆண்டு ஜப்பானில் புள்ளிகளே இல்லாத ஒட்டகச்சிவிங்கி ஒன்று பிறந்தது.

அதன் பின்னர் அத்தகைய ஒட்டகச்சிவிங்கி அமெரிக்காவில் பிறந்திருப்பதாக நம்பப்படுகிறது.

அதன் பெயர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

தாயின் பராமரிப்பிலும் விலங்குத் தோட்டத்தின் ஊழியர்களின் பராமரிப்பிலும் அது நன்கு வளர்வதாகத் தோட்டம் கூறியது.

ஒட்டகச்சிவிங்கியின் உரோமத்தில் இருக்கும் புள்ளிகள் காடுகளில் அவை மறைந்திருக்க உதவுகின்றன.

-AFP

Source:seithi


 



Post a Comment

0 Comments