இந்தோனேசிய நீதிமன்றம் TikTok பிரபலத்துக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
பன்றியைச் சாப்பிடுவதற்கு முன் "பிஸ்மில்லா" எனக் கூறியதற்காக..
அவர் காணொளியை TikTok தளத்தில் பதிவு செய்தார்.
சமயக் குழுக்களுக்கு எதிராக "வெறுப்பைத் தூண்டும்" விதத்தில் 33 வயதுடைய லினா லுட்ஃபியாவாத்தியின் (Lina Lutfiawati) செயல் இருந்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அபராதத்தை 3 மாதங்களுக்குள் செலுத்தத் தவறினால், தற்போது விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை நீட்டிக்கப்படும்.
பாலிவுட் திரைப்படங்களில் கொண்டிருந்த மோகத்தால், தமக்கு லினா முக்கர்ஜீ (Lina Mukherjee) எனப் பெயர் வைத்துக்கொண்டார்.
ஆனால் தம்மை ஒரு முஸ்லிமாகக் கருதுகிறார்.
இஸ்லாமியச் சமயத்தில் பன்றியை உட்கொள்வது முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று.
லினாவுக்கு வழங்கப்பட்டது தகுந்த தண்டனை என இணையவாசிகள் சிலர் குறிப்பிட்டிருந்தனர்.
Source:seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments